பிரச்னைக்கு பிறந்தவனுங்களா இருப்பானுங்க போலயே… எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் அடிக்கும் பூகம்பம்..!

by Akhilan |
பிரச்னைக்கு பிறந்தவனுங்களா இருப்பானுங்க போலயே… எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் அடிக்கும் பூகம்பம்..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு கணேஷ் கால் செய்ய அதிர்ச்சி ஆகிவிடுகிறார். உங்களுக்கு உங்க மகன் வாழ்க்கை தான் முக்கியம். நான் கொடுத்த டைம் முடிஞ்சிட்டு. நானே அமிர்தாவிடம் பேசி அவளை என்னோட அழைச்சிக்கிட்டு போயிடுவேன் என்கிறார். இதனால் பாக்கியா என்ன செய்ய எனத் தெரியாமல் முழிக்கிறார்.

செழியன் மற்றும் எழில் ஜெனியை பார்க்க அவர் வீட்டுக்கு செல்கின்றனர். மரியம் ஜெனியை ரூமில் வைத்து பூட்டி விட்டு வெளியில் வருகிறார். ஜெனியிடம் பேச வேண்டும் என செழியன் கேட்க ஜோசப் அதுக்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார். ஆனால் செழியன் விடாமல் நான் ஜெனியிடம் பேச வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் விரைந்த போலீஸார்! அந்த நடிகர் கொடுத்த புகார் – அதிரிபுதிரியாக நடந்த போண்டாமணி திருமணம்

ஒரு கட்டத்தில் கடுப்பாகும் ஜோசப், செழியனை அறைந்து விடுகிறார். இருந்தும் நான் ஜெனியிடம் பேச வேண்டும் என செழியன் கேட்க மீண்டும் அடிக்க போகும் ஜோசப் கையை எழில் பிடித்து விடுகிறார். நான் விவகாரத்து தர முடியாது என செழியன் கூற என்ன செஞ்சி வாங்கணும்னு எனக்கு தெரியும் என்கிறார்.

இதையடுத்து வீட்டுக்கு வரும் எழில் அங்கு நடந்ததை எல்லாரிடமும் சொல்கிறார். பாக்கியா வர செழியன் அவரை கட்டிக்கொண்டு அழுகிறார். பின்னர் சாப்பிட கூப்பிட செழியன் வர மாட்டேன் என மறுக்கிறார். உன்னால தாத்தா, பாட்டிலாம் சாப்பிடலை என்கிறார். ராதிகாவும் வந்து எல்லாரையும் சாப்பிட அழைக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை அழிக்க திட்டமிட்ட ஒரே நடிகர்! கேப்டனின் செல்வாக்கு தெரியாமல் சரண்டர் ஆனதுதான் மிச்சம்

Next Story