என்னங்கடா இது? அமிர்தா வாழ்க்கையில் நடக்கு களேபரம்.. பாக்கியா என்ன முடிவு எடுப்பாரோ..?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோயிலில் அமிர்தாவை பார்த்து கணேஷ் அமிர்தா என அழைத்து திரும்பி பார்க்கும் அவர் அதிர்ச்சி ஆகி விடுகிறார். ஆனால் நிற்காமல் எழிலை நோக்கி வர அவர் பேசும் முன்னரே மயக்கமாகி விடுகிறார். இதனால் எழிலும் ஷாக்காகி அமிர்தாவை எழுப்ப முயல்கிறார்.

ஆனால் அங்கு வரும் கணேஷ் வந்து நான்தான் அமிர்தவோட கணவர் நீ அமிர்தவ தொடக்கூடாது எனச் சொல்ல எழில் அதிர்ந்து நிற்கிறார். இருந்தும் எழில் அமிர்தாவை எழுப்ப முயல கணேஷும் ஒரு பக்கம் அமிர்தாவை எழுப்புகிறார். கண் விழித்த அமிர்தா கணேஷை பார்த்து பயப்படுகிறார்.

இதையும் படிங்க: அவமானங்களை தாண்டி வளர்ந்த விஜயகாந்த்!.. கேலி செய்தவர்கள் முன் ஜெயித்து காட்டிய கேப்டன்…

அந்த நேரத்தில் கணேஷின் அப்பா, அம்மாவும் அங்கு வருகின்றனர். உடனே கணேஷ் அமிர்தாவை அவர்கள் பக்கம் இழுத்து நிற்க வைக்க இதான் நம்ம குடும்பம் எனக் கூறுகிறார். இதனால் எழில் உடைந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் அமிர்தா என்னம்மா நடக்குது இங்க என அழுகிறார்.

ஒருநாள் நாங்க செத்து போனதா நினைத்த மகன் திரும்பி வந்தான். அது எங்களுக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா அவன் வந்ததும் உன்னை தான்மா கேட்டான் என்கின்றனர். இருந்தும் அமிர்தா இதை தெரிந்து கொண்டால் கஷ்டப்படுவா என்று தான் நாங்களும் பயந்தோம் எனக் கூற கணேஷ் கோபப்படுகிறார். அமிர்தாவை தன்னுடான் வீட்டுக்கு அழைக்க அவர் ஓடிச்சென்று எழில் அருகில் நின்று கொள்கிறார்.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. அரசு மரியாதையும் அறிவிப்பு!..

குழந்தை அம்மாவை வந்து அருகில் சொல்ல வர எழில் தூக்கிக்கொள்கிறார். கணேஷ் என் குழந்தை எனக் கேட்க அவ என் பொண்ணு என அமிர்தா வாங்கிக்கொள்கிறார். இந்த நேரத்தில் அமிர்தா விஷயம் வீட்டில் தெரிஞ்சு அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். வழக்கம் போல ஈஸ்வரி பழியை பாக்கியா மீதே போடுகிறார்.

நான் தான் அப்போவே அமிர்தா வேண்டாம் சொன்னேன்ல. இதை கேட்ட ராதிகாவும் அதிர்ச்சி ஆகிவிடுகிறார். இவர்கள் எழில், அமிர்தாவிடம் சொல்லக்கூடாது என யோசிக்க ராதிகா சொல்வதே நல்லது என்கிறார். கோயிலில் அமிர்தா எழில் பின்னாள் நின்றுக்கொள்ள கணேஷை பொறுமையா பேசலாம் என அழைத்து செல்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Related Articles
Next Story
Share it