மீண்டும் வீட்டுக்குள் பாக்கியாவை லாக் செய்ய திட்டம் போடும் ஈஸ்வரி..! பிரச்னையில் குளிர் காயும் கோபி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் காண்ட்ராக்ட் கிடைக்காமல் வீட்டுக்கு போகிறார் பாக்கியா. ஹாலில் சோகமாக இனியா அமர்ந்து கொண்டு இருக்கிறார். ஏன் என பாக்கியா கேட்க ட்ரெஸ் வாங்க கூப்பிட்டு போறேனு சொன்னீங்கள? இதான் வர நேரமா என்கிறார்.

எழில் அவங்க நிலைமை புரியாம பேசாதே எனக் கடுப்படிக்கிறார். அங்கு வரும் ஈஸ்வரி காண்ட்ராக்ட் என்ன ஆச்சு? எப்போ எக்ஸிபிஷன் தொடங்குது என ஈஸ்வரி கேட்கிறார். நிறைய பேர் வந்ததால் குலுக்கல் முறையில் வேற ஒருவருக்கு கொடுத்துட்டாங்க என்கிறார் பாக்கியா. அப்போ 1 லட்சத்து 10 ஆயிரம் போச்சா? இதுக்கு தானே சொன்னேன் என்கிறார் ஈஸ்வரி.

இதையும் படிங்க: ரஜினியோட இந்த படம் எம்ஜிஆர் படத்தோட காப்பியா?.. அட என்னடா சொல்றீங்க!…

இல்ல அத்தை மீது ஒரு லட்சம் தந்துடுவாங்க. அதையாது, நின்னு வாங்கிட்டு வரவேண்டியது தானே. அவ்வளவோ தான் போச்சு எனக் கோபமாகிறார் ஈஸ்வரி. கோபியும் அதெல்லாம் இனிமே வராது. அது என்னுடைய பணம். அந்த பணத்தை எப்படி வாங்கணுனு எனக்கு தெரியும் என பதிலடி கொடுக்கிறார்.

அதனையடுத்து, ஈஸ்வரி இனிமே நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம். மாமா பென்ஷன், செழியன், எழில் சம்பளம் வச்சு. குடும்பத்தினை பாத்துக்கோ என்கிறார். நான் யாரையும் நம்பி இல்ல. எனக்குன்னு வேலை வேணும். என் பணத்துல இந்த குடும்பத்தை நான் பாத்துப்பேன்னு சொல்லி இருக்கேன் எனச் சொல்லிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: முத்துவுக்கு செக் வைத்த பைனான்சியர்..! ரோகினியால் சங்கடப்பட்ட மீனா… ஸ்ருதி-ரவியின் திட்டம் என்னவோ?

 

Related Articles

Next Story