முத்துவுக்கு செக் வைத்த பைனான்சியர்..! ரோகினியால் சங்கடப்பட்ட மீனா… ஸ்ருதி-ரவியின் திட்டம் என்னவோ?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரவி விஜயா வந்த விஷயத்தினை ஸ்ருதியிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். பின்னர் வீட்டுக்கு வர சொன்னாங்க எனக் கூற அப்போ போயிட்டு வர வேண்டியது தானே என வம்பு செய்கிறார் ஸ்ருதி.

நீயும் தான் வரணும் என ரவி கூறுகிறார். பரவாயில்லையே கழட்டி விட்டு போயிடுவேனு நினைச்சேனே என்கிறார். என்ன எப்படி நினைச்ச? அவ்வளவோ சீப் இல்லை. நான் என்னைக்குமே உன்னை விட்டு போயிட மாட்டேன் என்கிறார் ரவி. இதை தொடர்ந்து வீட்டில் சமைத்து கொண்டு இருக்கிறார் மீனா.

இதையும் படிங்க:வளரும்போது அந்த நடிகர் தங்கிய அதே அறையில் தங்கிய அர்ஜூன்!.. இப்படி ஒரு செண்டிமெண்ட்டா!..

அப்போ அங்கு வரும் விஜயா சாப்பாடுல பாம்பை போட்டு சமைச்சியா எனக் கலாய்க்கிறார். பின்னர் அவர் சமைத்ததை காட்டி இதுல காய் தான் இருக்கு. நான் ஒழுங்கா தான் சமைச்சு வச்சேன். வேற யாரோ தான் திறந்து போட்டு இருக்கணும் எனக் கோபப்படுகிறார்.

இதையடுத்து அண்ணாமலையிடம் சொல்லி விட்டு பைனான்சியரை பார்க்க கிளம்புகிறார். பின்னர் கோயிலுக்கு போய் வேண்டி விட்டு அவர் வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். அதே நேரத்தில் ரோகினி, பைனான்சியர் மனைவிக்கு மசாஜ் செய்ய அங்கு செல்கிறார்.

தொடர்ந்து மீனா பைனான்சியர் வீட்டுக்கு செல்ல அவர் உனக்கு எத்தனை தடவைமா சொல்றது எனக் கோபப்படுகிறார். ஆனால் மீனா என் புருஷன் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார் எனக் கெஞ்சி கேட்கிறார். அதே நேரத்தில் அங்கு ரோகினி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இதையும் படிங்க: ரஜினியோட இந்த படம் எம்ஜிஆர் படத்தோட காப்பியா?.. அட என்னடா சொல்றீங்க!…

 

Related Articles

Next Story