Connect with us
arjun

Cinema History

வளரும்போது அந்த நடிகர் தங்கிய அதே அறையில் தங்கிய அர்ஜூன்!.. இப்படி ஒரு செண்டிமெண்ட்டா!..

Actor arjun: தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்கான வலம் வருபவர் அர்ஜூன். சினிமாவில் அறிமுகமான காலம் முதலே தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாகவே நடித்தவர். அடிப்படையில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர் என்பதால் சண்டைக்காட்சிகளில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

விஜயகாந்த் படங்களை போல அர்ஜூன் படம் என்றாலும் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும் என நினைத்தே ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்கள். படம் பிடிக்கிறதோ இல்லையோ சண்டை காட்சிகளில் ஏமாற்ற மாட்டார் அர்ஜூன். அதனால்தான் அவருக்கு ஆக்‌ஷன் கிங் என்கிற பெயர் கிடைத்ததது.

இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவில் அஜீத், விஜய்?!.. கமல் என நினைத்து கைகொடுத்த மக்கள்..

40 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வரும் நடிகர் இவர். பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் ஜென்டில்மேன், முதல்வன் போன்ற பல முக்கிய படங்களும் இருக்கிறது. ஜெய்ஹிந்த் உட்பல பல திரைப்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். பல ஹிட்களை கொடுத்திருக்கிறார்.

இப்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார். அதேபோல், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான லியோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதோடு, அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்திலும் வில்லனாக கலக்கி வருகிறார்.

இதையும் படிங்க: பாகுபலி படத்துக்கு செஞ்சதை விட!.. கங்குவா படத்துக்கு ஒரு பெரிய விஷயம் பண்ணியிருக்கோம் – மதன் கார்கி!..

அடிப்படையில் அர்ஜூன் பெங்களூரை சேர்ந்தவர். ஆனால், கன்னடத்தை விட தமிழ் சினிமாதான் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்தது. சினிமாவில் வளர துவங்கும்போது அவருக்கு சொந்த வீடெல்லாம் இல்லை. அப்போது சென்னையில் உள்ள பாம்குரோவ் ஹோட்டலில்தான் நடிகர் மோகன் தங்கியிருந்த அறையில்தான் தங்குவாராம்.

mike Mohan

பெங்களூரிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து மோகன் பெரிய நடிகராகி விட்டதால் நாமும் அப்படி ஆகிவிடுவோம் என்கிற செண்டிமெண்ட் காரணமாகவே மோகன் தங்கிய அதே அறையில் தங்கியிருக்கிறார் அர்ஜூன்…

இதையும் படிங்க: நீ அவன வெச்சி செஞ்சதுக்கு எப்படி வருவான்!.. வாரிசு நடிகர் பற்றி லோகேஷிடம் விஜய் அடித்த கமெண்ட்

google news
Continue Reading

More in Cinema History

To Top