கலைஞர் 100 விழாவில் அஜீத், விஜய்?!.. கமல் என நினைத்து கைகொடுத்த மக்கள்..
பிரபல யூடியூபர்கள் வலைப்பேச்சு அந்தனன், பிஸ்மி, சக்திவேல் ஆகியோர் இணைந்து வெளியிட்ட வீடியோவில் சினிமா செய்திகள் குறித்த பல்வேறு விஷயங்களை அலசினர்.
முதலில் அந்தனன் மற்றும் பிஸ்மி இருவரும் பேச ஆரம்பிக்கின்றனர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு திரையுலகம் சார்பாக கலைஞர் 100 என்ற விழாவைப் பெரிய அளவில் கொண்டாட உள்ளனர். கமலும், ரஜினியும் நிச்சயமாகக் கலந்து கொள்வர்கள். அதையும் தாண்டி மொத்த திரையுலகையும் வரவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக விஜய், அஜீத் என இருவரையும் வரவைக்க முயற்சி நடந்து கொண்டே இருக்கும்.
அஜர்பைஜானில் விடாமுயற்சி சூட்டிங்கிற்காக சென்றுள்ளார். விஜயின் எதிர்கால அரசியல் எதை எதிர்த்து என்று இருக்கு. கிட்டத்தட்ட திமுகவைத் தான் எதிர்க்கப் போகிறார். அதனால அவரும் வரமாட்டாரு. ஆனா இந்த பங்ஷன் முடியுற வரைக்கும் அவங்க வருவாங்களா மாட்டாங்களான்னு கடைசி வரைக்கும் இழுத்துக்கிட்டே இருக்கும்.
ரஜினியை மீட் பண்ணிருக்காரு கார்த்தி. 96 படத்துக்காகத் தாடி வச்சிருக்காரு. தஞ்சாவூர் பகுதில சூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்திற்கான பூஜை நேற்று சத்தமே இல்லாமல் நடந்துருக்கு. ஆனா விஜய் இந்தப் பூஜைக்கு வரவில்லை. அப்பாவின் தயவே இல்லாமல் சஞ்சய் வந்து இருப்பது தான் ஆச்சரியம்.
அப்போது சக்திவேல் பேசும்போது,
இந்தியன் 2 படத்தோட சூட்டிங் விசாகப்பட்டினத்தில பரபரப்பா நடந்துக்கிட்டு இருக்கு. கமலை பாபிசிம்ஹா துரத்திக்கிட்டுப் போற மாதிரி ஒரு சீன் எடுத்துருக்காங்க. ஆனா பார்த்தா அவரு டூப்பாம். எல்லாரும் கமல்னு நினைச்சி சூட்டிங் பார்க்க வந்தவங்க எல்லாரும் கைகொடுத்தாங்களாம். அப்புறம் பார்த்தா தான் தெரியுது. அவரு கமலே இல்லைன்னு... என்று கூறினார்.