மகளாக ராமமூர்த்திக்கு பாக்கியா செய்த விஷயம்.. கண்ணீர் வர வைக்கும் பாக்கியலட்சுமி புரோமோ..
Bakkiyalakshmi: விஜய் டிவியின் பிரபல தொடரான பாக்கியலட்சுமியில் தற்போது பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய புரோமோவை பார்த்து ரசிகர்களே கண்கலங்கும் நிலை உருவாகி இருக்கிறது.
விஜய் டிவி டிஆர்பியில் டாப்ஹிட்டில் இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. இத்தொடரில் எத்தனையோ வித்தியாசமான கதைகளங்கள் வந்து உள்ளது. அப்போதெல்லாம் பலரும் கலாய்த்து வந்தது தான் அதிகம்.
இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்
ஆனால் தற்போது இந்த சீரியலுக்கு முக்கிய தூணாக இருந்த ராமமூர்த்தி கேரக்டரை முடித்துள்ளனர். அவரின் இறுதி ஊர்வலத்தினை தத்ரூபமாக நடத்தவும் அவரிடம் கோரிக்கை வைத்த பின்னரே இந்த காட்சிகளை எடுத்துள்ளனராம்.
இன்று அவரின் இறப்பு எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டது. இதில் கோபிக்கு இன்று விஷயம் தெரியவந்ததாக காட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று புரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், ராமமூர்த்தியின் இறுதி ஊர்வலம் நடக்க இருக்கிறது.
இதையும் படிங்க: மலையாள கதையே ஓயலை… தெலுங்கு சினிமா பக்கம் பிரச்னை பத்திக்கொண்டதாம்.. பதற்றத்தில் பிரபல ஹீரோக்கள்
இதில் கோபி கடைசி செய்முறைகளை செய்ய இருக்க ஆனால் ஈஸ்வரி அதை தடுத்துவிடுகிறார். பின்னர் பாக்கியாவிடம் உங்க மாமாவின் ஆத்மா சாந்தி அடைய நீதான் எல்லாமே செய்யணும் எனக் கேட்கிறார்.
இதையடுத்து பாக்கியா ராமமூர்த்திக்கு கொள்ளி வைக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும்.இந்த புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியல் கதை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.