மாட்டிக்கினாரு ஒருத்தரு… கோபியை இனி யார் காப்பாத்துவா? பேச்சா பேசுனீங்க…

by Akhilan |   ( Updated:2024-02-26 05:18:45  )
மாட்டிக்கினாரு ஒருத்தரு… கோபியை இனி யார் காப்பாத்துவா? பேச்சா பேசுனீங்க…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கையில் அடிப்பட்டு வீட்டுக்கு வருகிறார் செல்வி. என்ன ஆச்சு எனக் கேட்க விழுந்துவிட்டதாக கூறுகிறார். அப்புறம் எதுக்கு வேலைக்கு வந்தாய் என ஈஸ்வரி கேட்க அக்கா ரெஸ்டாரெண்ட் தொடங்க இருக்காங்க. அதுக்கு கூட இருந்து வேலை செய்யத்தான் என்கிறார்.

அடுத்து ஈஸ்வரி தண்ணியை எடுக்க சமையலறைக்கு செல்கிறார். பாக்கியா தான் எடுத்து தருவதாக சொல்கிறார். வேண்டாம் நீ வேற ரெஸ்டாரெண்ட் தொடங்க போற அப்புறம் இதுக்கு உனக்கு எங்க நேரம் இருக்கும். நானே செஞ்சிக்கிறேன்.

இதையும் படிங்க: ஷண்முகி பாண்டிமுகியாகிடும்!.. ரெடின் கிங்ஸ்லி மனைவியை இதுக்கு மேல யாரும் கலாய்க்க முடியாது!..

குடும்பத்து மேல உனக்கு அக்கறை இருக்கா? இப்போ செழியன் பிள்ளைக்கு வாயில நுழையாத பெயரை வச்சிட்டாங்க என ஈஸ்வரி மீண்டும் புலம்புகிறார். அதுக்கு பதில் தரும் பாக்கியா, அந்த பங்ஷன் நடக்கலை. ஜெனி வீட்டில் இருந்து சீக்கிரம் வருவாங்க என நம்பிக்கை கொடுக்கிறார். இதனால் செழியன் சந்தோஷமடைகிறார். இதையடுத்து காரில் சென்று கொண்டு இருக்கும் ராதிகா கோபிக்கு கால் செய்கிறார்.

எங்கு இருக்கீங்க எனக் கேட்க கிளையண்ட் உடன் பேசிக்கிட்டு இருக்கேன். நான் உங்க ஆபிஸ் தான் வரேன். என்ன பிரச்னை இருக்கு அதை பேசி சரிப்பண்ணுவோம் என்கிறார். ஆபிஸை ராதிகா பார்த்துவிடக் கூடாது என்பதற்கு அவர் அங்கு வருவதற்குள் கோபி வந்து தடுத்துவிடுகிறார்.

பின்னர் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட அங்கு இருக்கும் வெயிட்டர் சார் எங்க ரெகுலர் கஸ்டமர் எனச் சொல்லி ராதிகாவுக்கு ஷாக் கொடுக்கிறார். பின்னர் சாப்பிட்டுவிட்டு ராதிகாவை அனுப்பிவிட்டு கோபியும் கிளம்பிவிடுகிறார். ஆனால் எதுவோ பிரச்னை இருப்பதை உணர்ந்த ராதிகா மீண்டும் கோபி ஆபிஸுக்கு செல்கிறார்.

இதையும் படிங்க: மூன்று ஜோடிகளையும் பிரிச்சிவிட்டாச்சு.. சிறகடிக்க ஆசை களேபரம்.. குழப்பத்தில் விஜயா!..

ஆனால் ஆபிஸ் பூட்டி இருக்க அருகில் இருப்பவரை அழைத்து விஷயத்தினை கேட்க அவர் இந்த ஆபிஸ் இரண்டு வாரத்துக்கு முன்னாடியே பூட்டப்பட்டது. அங்கு இருக்கும் ஊழியர்களுக்கு ஒரு வருஷமாக சம்பளம் கொடுக்கவில்லை. அதனால் பர்னிச்சரை எடுத்து சென்றுவிட்டதாக கூறி ஷாக் கொடுக்கிறார். இதனால் ராதிகா கடுப்பாகிறார். கோபி சொன்ன பொய்யை யோசித்து பார்க்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் ராதிகாவுக்கு ஆபிஸில் இருந்து கால் செய்து அவசரமாக வரும்படி அழைக்கின்றனர். இதனால் ராதிகா கிளம்பி விடுகின்றார். கோபி கால் செய்து எங்கு இருக்க எனக் கேட்க ஆபிஸுக்கு நெருங்கிவிட்டதாக கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: நெப்போலியன் வில்லனாக மிரட்டிய படங்கள்! எஜமானையே ஆட்டிப்படைத்த வல்லவராயனை மறக்க முடியுமா?

Next Story