மூணு பேரும் கூட்டா செய்ற வேலையா இது!... கோபி சார் இதுக்கு நீங்க உண்மைய சொல்லியே அடி வாங்கிருக்கலாம்!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா கலங்கி நிற்க ஏன் பாட்டி இப்படி பேசுறீங்க. இவளுக்கு கஷ்டமா இருக்காத என அங்கு வருகிறார் எழில். எனக்கும் தான் கஷ்டம் என்கிறார் ஈஸ்வரி. அப்படி யாரும் கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம். நாங்க வேணா தனியா போய்டுறோம் என்கிறார் எழில். உடனே ஈஸ்வரி என்ன இவன் இப்படி பேசுறான்.
பாக்கியா, அவன் எதோ கஷ்டத்துல பேசுறான் விடுங்க அத்தை என்கிறார். மொட்டை மாடியில் செழியன் உட்கார்ந்து குடித்து கொண்டு இருக்க அங்கே வருகிறார் கோபி. பாட்டியலை பின்னால் மறைக்க என்னவென கேட்கிறார். பின்னர் எனக்கு இருக்கா எனக் கேட்க இன்னொரு பாட்டிலை எடுத்து தருகிறார்.
இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…
இருவரும் குடித்துக்கொண்டு இருக்க எழில் வருகிறார். செழியன் அவரையும் கூப்பிட மூவரும் உட்கார்ந்து குடித்துவிட்டு புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். எழில் கணேஷ் விஷயத்தில் எனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு தேங்ஸ்ப்பா என்கிறார். நான் எப்பையும் இந்த குடும்பத்துக்காக இருப்பேன் என்கிறார்.
என் விஷயத்துக்கு தான் சொன்னேன். அம்மாக்கு பண்ணத நான் மறக்க மாட்டேன் என ஷாக் கொடுக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவும், ராதிகாவும் மாடிக்கு வர மூவரும் பயந்து விடுகின்றனர். பாக்கியா அருகில் இருந்த பாட்டிலை பார்த்து திட்டி இருவரையும் அழைத்து சென்று விடுகிறார்.
இதையும் படிங்க: அட மீனாக்கு பேசலாம் தெரியுதுப்பா!… ஓனர் ஆனதும் கெத்தும் வந்துடுச்சேம்மா!…