ரொம்ப உருட்டுறீங்க மக்கா!... சீக்கிரம் இந்த சங்கமத்த முடிச்சி விடுங்களேன்..கடுப்பான ரசிகர்கள்

by Akhilan |
ரொம்ப உருட்டுறீங்க மக்கா!... சீக்கிரம் இந்த சங்கமத்த முடிச்சி விடுங்களேன்..கடுப்பான ரசிகர்கள்
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் உப்பை அள்ளிக்கொட்டி இருக்கும் மினிஸ்டர் ஆட்களிடம் சத்தம் போடும் பாக்கியா, செல்வியை அழைத்து வேறு பருப்பை வேக வைக்க சொல்லி அனுப்புகிறார். பின்னர் ரூமில் மீனா, கோமதி, கதிர் மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். தங்கள் கல்யாணம் நடந்த கதையை சொல்லி கண்ணீர் வடிக்கிறார்.

பின்னர் பாக்கியா, செல்வி, எழில் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். பாக்கியாவின் திடீர் சாம்பார் குறித்து பலரும் பாராட்டியதாக சொல்லுகிறார். ஜெனி கால் செய்து ஞானஸ்தானம் செய்வது குறித்து சொன்னதாக கூறுகிறார். கூப்பிடாததை குறித்து வருத்தமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?

பின்னர் மினிஸ்டர் அங்கு வருகிறார். பாக்கியா சமையலை வெகுவாக பாராட்டிவிட்டு செல்கிறார். அவர் அனுப்பிய ஆட்களை நிறைய உழைச்சி இருக்கீங்க. இவங்களை பாத்துக்கோங்க எனவும் சொல்லிவிட்டு செல்கிறார். அவர்களும் பாத்துக்கிறோம் என சமாளித்து அனுப்புகின்றனர். இதை தொடர்ந்து செல்வி அவர்களை கரிச்சு கொடுட்டுகிறார்.

இன்னைக்கு சமாளிச்ச மாதிரி இன்னும் 2 நாள் சமாளிச்சிடலாம் எனக் கூறுகிறார். பின்னர் குன்னக்குடியில் ராஜீக்கு மருதாணி வைத்து விடுகின்றனர். இனியா அதுகுறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் கோமதி அம்மா மற்றும் சின்ன மருமகள் மாரி இருவரும் வம்பு செய்து கொண்டு இருக்கின்றனர். ராஜீ ரொம்பவே வருத்தமாக இருக்கிறார்.

இதை ராதிகா சரியாக கணித்து விடுகிறார். அவர் மொபைலை அடிக்கடி பார்ப்பதை கவனித்தும் விடுகிறார். பின்னர் கோபி வெளியில் போய்விட்டு பாண்டியன் வீட்டுக்குள் வந்து சண்டை செய்து கொண்டுள்ளார். முத்துவேல் வீடு என நினைத்துக்கொண்டு பாண்டியனிடம் சண்டை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: புற்றுநோயால் குரலை இழந்த பவதாரிணி!.. இசைஞானிக்கு இப்படி ஒரு சோகமா!..

பாண்டியனை திட்டிவிட்டு கோபி கிளம்பிவிடுகிறார். ஹோட்டலில் கோமதி ரிசப்ஷனில் வந்து சண்டை செய்து இருக்கிறார். அப்போ பாக்கியாவும், செல்வியும் அங்கு வருகின்றனர். கோமதியிடம் பேசிக்கொண்டு இருக்க அவர் தானும் சமைக்க வருவதாக கூறுகிறார். ஆனால் பாக்கியா பரவாயில்லை எனக் கூறுவிடுகிறார்.

கோமதி வலுகட்டாயமாக கேட்க கடைசியில் பாக்கியாவும் சரியென சம்மதம் சொல்லிவிடுகிறார். வீட்டில் பாண்டியன், அவர் மகன்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டுள்ளனர். பின்னர் செந்தில் கல்யாணம் குறித்து பேசிக்கொண்டு உள்ளனர். இதை தொடர்ந்து அமிர்தாவும், எழிலும் பேசிக்கொண்டு இருக்க அங்கே மீனா வருகிறார்.

கல்யாணம் குறித்து பேச்சு வருகிறது. அமிர்தா அமைதியாகி விடுகிறார். பின்னர் அவர்கள் பேச்சு மாமியார் பேச்சு செல்கிறது. இவர்கள் குடும்பம் பற்றி பேசிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: எப்படி இப்படிலாம் படம் பண்றீங்க?!.. நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!. எஸ்.கே-வை ஃபிளாட் ஆக்கிய ரஜினி…

Next Story