எப்படி இப்படிலாம் படம் பண்றீங்க?!.. நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!. எஸ்.கே-வை ஃபிளாட் ஆக்கிய ரஜினி...

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களால் சீனியர் நடிகர்களை பின்னுக்கு தள்ளி மேலே போனவர். ஒரு கட்டத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்தார். இன்னமும் அந்த இடம் அவரிடம்தான் இருக்கிறது.

ஏனெனில், இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைக்கிறது. எனவே, சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டார். மாவீரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த படம்தான் அயலான். இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை. பூமிக்கு வரும் ஒரு ஏலியன் பற்றிய கதை.

இதையும் படிங்க: கைய வச்சு பாரு.. யார கேட்டு இந்த டைட்டில் வச்ச? இயக்குனரை பாடாய் படுத்திய ஷகீலா..

பொங்கலுக்கு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்று வருகிறது. எனவே, அயலான் 2 பட வேலைகளும் துவங்கிவிட்டது. இந்நிலையில், இந்த படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் அழைத்து பாராட்டினாராம்.

ayalaan

'எப்படி இப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு கொடுக்கிறீர்கள்?' என ரஜினி கேட்க சிவகார்த்திகேயனோ ‘சார் நீங்கதான் சார் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். நாங்க முதல்ல பார்த்த சயின்ஸ் பிக்சன் படமே எந்திரன் படம்தான். அதுதான் எங்களுக்கு இன்ஸ்பிரேசன்’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: புற்றுநோயால் குரலை இழந்த பவதாரிணி!.. இசைஞானிக்கு இப்படி ஒரு சோகமா!..

அதைக்கேட்ட ரஜினி ‘ரசிகர்களுக்கு புதுசு புதுசா படங்களை கொடுக்குறீங்க. இப்ப எனக்கு நீங்கதான் இன்ஸ்பிரேஷன்’ என சொன்னாராம். இந்த தகவலை சிவகார்த்திகேயன் ஊடகம் ஒன்றில் சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார். ரஜினி சாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் இப்படி பாராட்டியதை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும். இது போல பாராட்டும் மனசு அவருக்கு மட்டுமே வரும்’ என கூறியுள்ளார்.

சினிமாவில் நடிக்க துவங்கிய உடனே ரஜினி பாணியில் காமெடி, காதல், ஆக்‌ஷன் கலந்த கதைகளில்தான் சிவகார்த்திகேயன் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாகவும் அவர் மாறினார். ரஜினி ரூட்டில் போய் சூப்பர்ஸ்டார் இடத்தை பிடிப்பதும் அவரின் ஆசையாக இருக்கும் என்றும் சொல்லலாம்.

இதையும் படிங்க: வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?..

 

Related Articles

Next Story