ஒருவழியா சங்கமத்துக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு… இனிமே பாக்கியா- கோபி எண்ட்ரி தான்..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜி மற்றும் கதிர் கல்யாணம் செய்து கொண்டு வந்ததுக்கு அனைவரும் திட்டிக்கொண்டு இருக்கின்றனர். குமார் நீ என் தங்கச்சிய கடத்தி போய் தான் கல்யாணம் பண்ணி இருப்ப என கத்த அதை உன் தங்கச்சிக்கிட்டையே கேளு என கதிர் பதிலடி கொடுக்கிறார்.
பின்னர் அரிவாளுடன் சக்திவேல வர அவரை எல்லாரும் தடுத்து விடுகின்றனர். அடுத்து பாண்டியன் கதிருடன் வந்து சத்தம் போடுகிறார். ராஜி எடுத்து வந்த நகை, பணம் எங்கு எனக் கேட்க கதிர் அசராமல் செலவாகிவிட்டதாக கூறுகிறார். இதனால் ராஜி அதிர்ச்சி ஆகி நிற்கிறார். பாட்டி சண்டை போடாதீங்க என சமாதானம் செய்கிறார். இப்போ என்ன அவ வேற யாரையோ பண்ணிக்கலை தானே.
இதையும் படிங்க: எழுதியா கொடுக்கிற? அடிக்கிறேன் பாரு கவுண்டரு – அர்ஜுனை காயப்படுத்திய கவுண்டமணி காமெடி!
சொந்த அத்தை பையனை தானே பண்ணிக்கிட்டா. நகையெல்லாம் எதுக்கு கேட்குறீங்க? அதை யாருக்கு சேர்த்து வச்சோம். எல்லாம் அவளுக்கு தானே எனப் பேசுகிறார். ஆனால் முத்துவேல் நீ செஞ்ச எல்லாத்தையும் மறந்துட்டேன். ஆனா உன் கழுத்தில் அவன் கட்டுன தாலியை கழட்டி கொடுத்துட்டு வா என ஷாக் கொடுக்கிறார்.
ஆனால் ராஜி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க பாட்டி தாலியை கட்டி கொடுத்தால் நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என்கிறார். இதனால் முத்துவேல் இனி உனக்கும், எனக்கு எந்த சம்மந்தம் இல்லை எனக் கூறி உள்ளே சென்றுவிடுகிறார். மற்றவர்களும் அவரை பின்தொடர்ந்து சென்றுவிடுகின்றனர்.
ராதிகா, கோபி, இனியா ஊருக்கு கிளம்பிவிடுகின்றனர். பாக்கியா நீங்களாவது உள்ளே கூப்பிடுங்க என பாண்டியனை கேட்கிறார். என்னை கேட்டா கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. அவங்கள உள்ளே கூப்பிட மட்டும் நானா எனச் சொல்லிவிட்டு செல்கிறார். உள்ளே ராஜி மற்றும் கதிரை அழைத்து வரும் பாக்கியாவுக்கு கோமதி நன்றி சொல்கிறார்.
இதையும் படிங்க: எழுதும்போது தப்பாச்சி.. அதுவே அவருக்கு பேர் ஆச்சி!.. கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்..