Connect with us
arj

Cinema News

எழுதியா கொடுக்கிற? அடிக்கிறேன் பாரு கவுண்டரு – அர்ஜுனை காயப்படுத்திய கவுண்டமணி காமெடி!

Actor Goundamani: கோலிவுட்டில் நகைச்சுவையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் நடிகர் கவுண்டமணியும் முக்கியமானவர். கிட்டத்தட்ட 60 வருடங்களாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் கவுண்டமணி பல முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்த நடிகராக வலம் வந்தார்.

அவர் போடும் கவுண்டர்களால் பிரபலமானார் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். இவரின் தனித்துவமான காமெடி அதோடு ஓவ்வொரு வசனத்திற்கும் இடையில் இவர் போடும் கவுண்டர் ரசிகர்களை பெரிதும் வரவேற்றது.

இதையும் படிங்க: விஜயகாந்தை இவ்வளவு நாள் காப்பாத்துனதே இதுதான்! ஓ இதுக்குத்தான் யாரையும் பாக்க விடலயா?

தனித்துவமான குரல் வளம், குறும்புத்தனமான நடிப்பு இவற்றால் மக்களிடம் பெரிதும் கவனம் பெற்றார் கவுண்டமணி. தனக்கு எதிராக எந்த முன்னணி நடிகராக இருந்தாலும் அவர்களை பற்றி கவலையே கொள்வது இல்லை.  அடுத்தடுத்து கவுண்டர்களை தட்டி விட்டு அந்த நடிகர்களையே பங்கம் செய்வார் கவுண்டமணி.

இது ஒரு வகையில் சம்பந்தப்பட்ட சில நடிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் இந்த போக்கை கவுண்டமணி நிறுத்தவில்லை. சொல்லப்போனால் இதுதான் கவுண்டமணிக்கு பக்கப் பலமாக இருந்தது. பெரும்பாலும் கவுண்டமணி ஸ்கிரிப்ட்டில் இருப்பதை பேச மாட்டார்.

இதையும் படிங்க: குறைந்த விலை.. செம கலெக்‌ஷன்!.. முத்தழகு ஷோபனாவின் பொங்கல் ஷாப்பிங் வீடியோ! ..

அந்த நேரத்தில் என்ன வருகிறதோ அப்படியே காமெடியாக பேசுபவர். ஜெய்ஹிந்த் படத்தில் கவுண்டமணியின் காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை அர்ஜூன் இயக்கி அவரே நடிக்கவும் செய்தார். அதனால் கவுண்டமணி காமெடி உட்பட அனைத்து வசனங்களையும் அர்ஜூன் தான் எழுதிக் கொடுத்தாராம்.

ஆனால் அது எதையும் கவுண்டமணி பேசவில்லையாம். ஸ்பாட்டில் அப்படியே தனக்கு தோன்றியதை பேசி காமெடி செய்திருக்கிறார். இது ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அர்ஜூன் ஃபிரேமை விட்டு வெளியே போய்விட்டாராம். என்ன இருந்தாலும் ஒரு இயக்குனராக தான் எழுதிக் கொடுத்ததை பேசாமல் அவராகவே பேசி நடித்தது வருத்தமாகத்தான் இருந்திருக்கும்.

இதையும் படிங்க: விஜயகாந்துடன் அதிக படங்களில் நடித்த டாப் 10 நடிகைகள்!.. அசால்ட் பண்ணிய ராதிகா!..

google news
Continue Reading

More in Cinema News

To Top