Breaking Bad நடிகர் ஆர்.ஜே.மிட்டே தற்கொலை!.. சோகத்தில் ரசிகர்கள்!…

X
Breaking Bad நடிகர் ஆர்.ஜே.மிட்டே தற்கொலை!.. சோகத்தில் ரசிகர்கள்!…

நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற வெப்தொடர் Breaking Bad. பல சீசன்களாக வெளிவந்த இந்த வெப்தொடர் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

இந்த வெப் சீரியஸின் பல காட்சிகள் தமிழ் சினிமாவிலும் வந்தது. இந்நிலையில் இந்த தொடரில் வால்ட் ஒயிட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆர்.ஜே.மிட்டே(34) உயிரிழந்துள்ளார். நிஜ வாழ்வில் பெருமூளை வாதத்துடன் வாழ்ந்த மிட்டே பிரேக்கிங் பேட் தொடரில் அதையே தனது கதாபாத்திரமாக எடுத்துக்கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

டெக்ஸாஸில் உள்ள தனது வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மிகவும் குறைந்த வயதிலேயே ஆர்.ஜே.மிட்டே உயிரிழந்தது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது.