கடந்த பல வருடங்களாகவே திரையுலகில் இசை வெளியீட்டு விழா என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு புதிய திரைப்படத்தை ரசிகர்களிடம் புரமோட் செய்வதற்கு இந்த விழாவை நடத்துவார்கள். குறிப்பாக ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களால் கவனிக்கப்படும்.
விஜயின் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களின் ஆடியோ லான்ச் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த பட விழாவில் ரஜினி பேசியது விஜய் ரசிகர்களுக்கு கோபப்படுத்தை ஏற்படுத்த அப்போதிலிருந்து இப்போது வரை அவர்கள் ரஜினியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
இந்நிலையில்தான், ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவை படக்குழு நடத்தவில்லை. ரஜினியே அதை தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்கிற பெயரில் சன் பிக்சர்ஸ் அரங்கில் படக்குழு கலந்து கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு சமீபத்தில் அது சன் தொலைக்காட்சியிலும் வெளியானது. அந்த விழாவில் பேசிய ரஜினி ‘5 மணி நேரம் ரசிகர்கள் டயர்ட் ஆகி விடுவார்கள் என்பதால் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என தவிர்த்து விட்டோம்’ என கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ‘ரஜினி சொல்வது உண்மை என்று எனக்கு தோன்றவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை படத்தின் புரமோஷனை விட அந்த வீடியோவை வைத்து சன் டிவியில் இரண்டு நாள் கல்லா கட்டுவார்கள்.. அதனால் பல கோடி வருமானமும் கிடைக்கும்.. அதை வேண்டாம் என கலாநிதி மாறன் சொல்லமாட்டார்.
5 மணி நேரம் ரசிகர்கள் அமர மாட்டார்கள் என்றால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கூட நிகழ்ச்சியை நடத்தலாம். உண்மை அது அல்ல.. ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தினால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.. ஆனால் தற்போது தவெக ஆட்சி நடைபெறும் நிலையில் அதற்கு அனுமதி கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
ரஜினிக்காக விஜய் அனுமதி கொடுத்தாலும் படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் என்பதால் அது நடக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொடர்ந்து தவெக அரசுக்கும், விஜய்க்கும் எதிராக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
மலேசியாவில் இசை வெளியிட்டு விழாவை நடத்தலாம் என கலாநிதி மாறன் ஆசைப்பட்டார். ஆனால் ஏற்கனவே அங்கு நடந்த ஜனநாயகன் இசை வெளியிட்டு விழாவோடு இதை ஒப்பிடுவார்கள் என்பதால் ரஜினி அதையும் விரும்பவில்லை.. தவெக அரசிடம் அனுமதி கேட்க விருப்பமில்லாமல் கூட கலாநிதி மாறன் ஆடியோ லான்ச்சை தவிர்த்திருக்கலாம்’ என அவர் கூறினார்.







