கோபிக்கே ஷாக் கொடுக்கிறீங்களே பாக்கியா.. செழியன் பிரச்னை ஓவருங்க…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் செழியன் ஒன்றாகி விடுகின்றனர். இதை பார்த்து மரியம் மற்றும் பாக்யா இருவரும் கண்கலங்குகின்றனர். எழில் என்ன முடிவு செஞ்சிருக்கீங்க என கேட்கிறார். ஆனால் இருவரும் பேசாமல் அமைதியாக நிற்க எழில் நானே சொல்றேன் ஜெனி நீங்க எங்க வீட்டுக்கு தானே வர போறீங்க என்கிறார். கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கும் ஜெனி பின்னர் ஆமாம் என தலை அசைக்கிறார்.
இதைக் கேட்ட மரியம் மற்றும் பாக்யா சந்தோஷமாகி விடுகின்றனர். பாக்கியா மரியத்திடம் நான் ஜெனியை வீட்டுக்கு கூப்பிட்டு செல்லவா என்கிறார். மரியம் நான் ஜோசப்பிடம் சொல்லாமல் தான் அழைத்து வந்தேன் அவரிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள். ஆனால் ஏனெனில் அவர் கோபப்படுவார் என கேட்க அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி மரியம் அழைத்து செல்கிறார்.
இதையும் படிங்க: நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி – விஜயகாந்த்
பின்னர் அனைவரும் ஜெனி வீட்டிற்கு வருகின்றனர். ஜெனி உடன் செழியன் வந்திருப்பதை பார்த்து ஜோசப் கோவம் ஆகிறார். குழந்தை அவர் கையில் இருப்பதை பார்த்து நீ ஏன் இங்கு வந்த குழந்தையை ஏன் உன் கையில் வைத்திருக்க என சத்தம் போடுகிறார். மரியம் அவரை மறித்து வீட்டுக்குள் வாங்க எல்லாத்தையும் பேசிக் கொள்ளலாம் என அழைத்து செல்கிறார்.
மதியம் நாங்க சர்ச்சுக்கு போகல ஜெனியும் செழியனும் தனியா பேசுவதற்கு அழைத்து சென்றேன். அவங்க பிரச்சினையை அவங்க பேசி சமாதானம் செஞ்சிக்கிட்டாங்க என்கிறார். இதனால் கோபமாகும் ஜோசப் அந்த நாடகத்தை எல்லாம் என்னால நம்ப முடியாது என்கிறார். ஆனால் ஜெனி நான் செழியனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க இருக்கேன் டேடி என்கிறார்.
இருந்தும் ஜோசப் கோபமாக யாருமே தப்பு செஞ்சது இல்லையா? செழியன் அவர் தப்ப புரிஞ்சுகிட்டார் என மரியம் சொல்ல கடுப்பாகி உள்ளே சென்று விடுகிறார் ஜோசப். மரியம் அவரை நான் பார்த்துக்கிறேன் நீ போயிட்டு வாம்மா என்கிறார். மீண்டும் ஜெனியிடம் இனிமே கொஞ்சம் கவனமாய் இரு செழியனை சரியா பாத்துக்கோ என அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.
இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..
வீட்டில் இருப்பவர்கள் பாக்கியா செழியன் மற்றும் எழிலை அழைத்துக் கொண்டு ஜோசப் வீட்டிற்கு தான் சென்று இருப்பார் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு கடுப்பாகும் கோபி அவ மட்டும் தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்கா. அவளை திருத்த தான் முடியல என புலம்பி கொண்டிருக்கிறார். இதை கேட்கும் ராதிகா அவங்க பையனுக்காக செய்றாங்க இதுல என்ன இருக்கு நீங்க விடுங்க என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.