நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி - விஜயகாந்த்

நடிகர்களோட கடைசி படம் என்னவா இருக்கும்னு பார்க்கறதுக்கு நமக்கு ரொம்ப ஆவலா இருக்கும். அப்படிப் பார்த்தீங்கன்னா முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜபாகவதர்ல இருந்து நடிகர் திலகம் சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன், நாகேஷ, விஜயகாந்த், முரளின்னு பெரிய நடிகர்களும், சின்ன நடிகர்களும் என லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கு. கொஞ்சம் பொறுமையா படிங்க... பாஸ்.!

கேப்டன் விஜயகாந்த் நடித்த கடைசி படம் சகாப்தம். நடிகர் விவேக் நடித்த கடைசி படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். நடிகர் முரளி நடித்த கடைசி படம் பாணா காத்தாடி. நடிகர் நிதிஷ் வீரா நடித்த கடைசி படம் பெல்.

நடிகர் அல்வா வாசு நடித்த கடைசி படம் சொல்லுங்கண்ணே சொல்லுங்க. நடிகர் போண்டா மணி நடித்த கடைசி படம் ஸ்ரீசபரி ஐயப்பன். நடிகர் மாறன் நடித்த கடைசி படம் ஆண்டி இண்டியன், நடிகர் சரத்பாபு நடித்த கடைசி படம் போர் தொழில். நடிகர் தீப்பெட்டி கணேசன் நடித்த கடைசி படம் அண்ணாமலையின் பொருளு, நடிகர் மயில்சாமி நடித்த கடைசி படம் சபாநாயகன், நடிகர் புனித்ராஜ்குமார் நடித்த கடைசி படம் கந்தடகுடி என்ற கன்னடப்படம்.

Gunal, Murali

Gunal, Murali

நடிகர் குணால் நடித்த கடைசி படம் நண்பனின் காதலி, நடிகர் மனோபாலா நடித்த கடைசி படம் பில்டப், மாரிமுத்து நடித்த கடைசி படம் உலகம்மை, ஜே.கே.ரித்தீஷ் நடித்த கடைசி படம் எல்கேஜி, சலீம் கௌஸ் நடித்த கடைசி படம் கா, டி.பி.கஜேந்திரன் நடித்த கடைசி படம் இது கதையல்ல நிஜம், நடிகர் இ.ராமதாஸ் நடித்த கடைசி படம் பருந்தாகுது, ஊர்க்குருவி. சேதுராமன் நடித்த கடைசி படம் 50ஃ50. ஆர்.எஸ்.சிவாஜியின் கடைசி படம் நாடு. கே.விஸ்வநாத் தமிழில் நடித்த கடைசி படம் சொல்லி விடவா.

ஜூனியர் பாலையா நடித்த கடைசி படம் என்னங்க சார் உங்க சட்டம், ஜூடோ ரத்னம் நடித்த கடைசி படம் தலைநகரம், கோபாலகிருஷ்ணன் நடித்த கடைசி படம் அண்ணாத்த, விசு நடித்த கடைசி படம் மணல்கயிறு 2, பாண்டு நடித்த கடைசி படம் இந்த நிலை மாறும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் நடித்த கடைசி படம் மூணே மூணு வார்த்தை, நெடுமுடி வேணு தமிழில் கடைசியாக நடித்த படம் சர்வர் தாளமயம்.

மகேந்திரன் நடித்த கடைசி படம் கொம்பு வச்ச சிங்கம்டா, கொச்சின் ஹனிபா தமிழில் நடித்த கடைசி படம் தொட்டுப்பார், கிரேசி மோகன் நடித்த கடைசி படம் கல்யாண சமையல் சாதம், கிருஷ்ணமூர்த்தி நடித்த கடைசி படம் பேய் மாமா, சண்முக சுந்தரம் நடித்த கடைசி படம் கபடி ப்ரோ, ஆர்என்ஆர்.மனோகர் நடித்த கடைசி படம் ராயர் பரம்பரை.

கோவை செந்தில் நடித்த கடைசி படம ; துடிக்குது புஜம், ஸ்ரீஹரி தமிழில் நடித்த கடைசி படம் பள்ளிக்கூடம் போகாமலே, குள்ளமணி நடித்த கடைசி படம் சந்தித்ததும், சிந்தித்ததும், மலேசியா வாசுதேவன் நடித்த கடைசி படம் திருமதி தமிழ், ராமிரெட்டி தமிழில் நடித்த கடைசி படம் நெஞ்சினிலே, கிரிஷ் கர்நாட் நடித்த கடைசி படம் 24. ஓமக்குச்சி நரசிம்மன் நடித்த கடைசி படம் தலைநகரம்.

OKN MVD SS

OKN MVD SS

எஸ்எஸ்.சந்திரன் நடித்த கடைசி படம் ஒருமுறை சொல்லிவிடு, டைகர் பிரபாகர் தமிழில் நடித்த கடைசி படம் முத்து, மாத்ருபூதம் நடித்த கடைசி படம் துள்ளல், மணிவண்ணன் நடித்த கடைசி படம் சூரன், பாலாசிங் நடித்த கடைசி படம் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?, ராஜசேகர் நடித்த கடைசி படம் சரவணன் இருக்க பயமேன், ரகுவரன் நடித்த கடைசி படம் அடடா என்ன அழகு.

செந்தாமரை நடித்த கடைசி படம் துருவ நட்சத்திரம், பாலு ஆனந்த் நடித்த கடைசி படம் மனிதன், குமரி முத்து நடித்த கடைசி படம் வில்லு, சிட்டி பாபு நடித்த கடைசி படம் இஞ்சி முறப்பா, கலாபவன் மணி நடித்த கடைசி படம் புதுசா நா பொறந்தேன், சோ நடித்த கடைசி படம் காதலா காதலா, காதல் தண்டபாணி நடித்த கடைசி படம் 9 குழி சம்பத், பாண்டியன் நடித்த கடைசி படம் புதுசு கண்ணா புதுசு.

ஜெய்கணேஷ் நடித்த கடைசி படம் என்னைத் தாலாட்ட வருவாளா, சுருளிராஜனின் கடைசி படம் பிள்ளையார், வி.கே.ராமசாமியின் கடைசி படம் காதல் அழிவதில்லை, மேஜர் சுந்தரராஜன் நடித்த படம் கேம், விஎஸ்.ராகவன் நடித்த கடைசி படம் காத்தாடி, கே.பாலாஜியின் கடைசி படம் விடுதலை, தேங்காய் சீனிவாசனின் கடைசி படம் கிருஷ்ணன் வந்தான், ஆர்எஸ்.மனோகரின் கடைசி படம் நானே வருவேன், அசோகனின் கடைசி படம் ஒரு வாரிசு உருவாகிறது.

இதையும் படிங்க... 3 படம் ஹிட் கொடுத்தேன்.. ஆனாலும் சரண் அப்படி செய்தார்!.. ஃபீல் பண்ணி பேசும் பரத்வாஜ்!..

ஸ்ரீகாந்தின் கடைசி படம் குடியரசு, சந்திரபாபு நடித்த கடைசி படம் அவன் தான் மனிதன், என்எஸ்.கிருஷ்ணன் நடித்த கடைசி படம் ராஜாதேசிங்கு, ஜெய்சங்கரின் கடைசி படம் பூவாசம், நம்பியாரின் கடைசி படம் சுதேசி, ரவிச்சந்திரனின் கடைசி படம் ஆடுபுலி, பி.யு.சின்னப்பாவின் கடைசி படம் சுதர்ஸன், பி.எஸ்.வீரப்பாவின் கடைசி படம் நீங்களும் ஹீரோதான், தியாகராஜ பாகவதரின் கடைசி படம் சிவகாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரனின் கடைசி படம் தீக்குச்சி, ஜெமினிகணேசனின் கடைசி படம் அடிதடி.

முத்துராமனின் கடைசி படம் போக்கிரி ராஜா, நாகேஷின் கடைசி படம் தசாவதாரம், சிவாஜியின் கடைசி படம் பூப்பறிக்க வருகிறோம், எம்ஜிஆரின் கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், ரங்கா ராவின் கடைசி படம் சிவகாமியின் செல்வன்.

Related Articles
Next Story
Share it