கோபிக்கு வாய் மட்டும் அடங்காதே… இப்படியா வாங்கிக் கட்டுவீங்க… உங்களுக்கு தேவை தான்!

by Akhilan |
கோபிக்கு வாய் மட்டும் அடங்காதே… இப்படியா வாங்கிக் கட்டுவீங்க… உங்களுக்கு தேவை தான்!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி ஒரு பிரச்னைக்காக தன் குடும்பம் தன்னுடன் நின்றதை நினைத்து ரொம்பவே பெருமையாக பேசுகிறார். ஆனால் அவர் ராதிகா பெயரையே மறந்துவிட இதனால் கடுப்பாகும் ராதிகா, அவரை திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

ஈஸ்வரி மற்றும் செழியன் ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போ டிவியில் அப்பா, மகன் பாடல் ஓட இதை கேட்ட செழியன் கண்ணீர் விடுகிறார். பாக்கியா இதை கவனித்து விட செழியனும் தனக்கு என் பையன் நியாபகம் வந்துவிட்டதாக கூறுகிறார்.

இதையும் படிங்க: அந்தப் பாடலில் கதாநாயகியை நடிக்க வைக்க படாத பாடுபட்ட பாரதிராஜா… காரணம் இதுதானாம்!..

இதனால் கடுப்பாகும் பாக்கியா என்ன செய்ய டிப்டாப்பா டிரெஸ் செஞ்சிக்கிட்டு போய் வேலை செய்ய எனக்கு நடக்கலை. மாமனார், மாமியார், பிள்ளைகளை எல்லாரையும் பார்க்கணும். சிலருக்கு அப்படி இல்லை. எழுந்து ட்ரெஸ் செஞ்சிட்டு நேரா வருவாங்க. சாப்பிட்டு வேலைக்கு போவாங்க. அதை கூட சரியா செய்ய தெரியாம பூட்டு போட்டு தான் வந்துடுவாங்க எனத் திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.

இதையும் படிங்க: குணா படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!.. ஷாக் கொடுத்த சந்தானபாரதி!.. இதெல்லாம் நம்பவே முடியலயே!..

இதை தொடர்ந்து ஜெனியை பங்ஷனுக்கு அழைக்க பாக்கியா மற்றும் இனியா அவர் வீட்டுக்கு செல்கின்றனர். ஆனால் ஜெனியின் அப்பா கோபப்பட எனக்கு ஜெனி மேல அக்கறை இருக்கு. கூப்பிட வேண்டியது என் கடமை. வரதும் வராம இருக்கதும் அவளோட இஷ்டம் எனக் கூறிவிட்டு பத்திரிக்கை வைத்துவிட்டு செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story