என்ன கோபி இப்படி பாக்கியாக்கிட்ட மொக்கை வாங்கிட்டீங்களே… இதான் ஓவரா பேசக்கூடாது!...
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரிக்கு கால் செய்து செஃப் லீவ் போட்டு விட்ட விஷயத்தினை சொல்கிறார். இதனால் அவரும் ஷாக் ஆகிறார். எதாச்சும் நீங்க ஐடியா பண்ணுங்கம்மா என்கிறார். இதனால் ஈஸ்வரியும் அவசரமாக கிளம்பி கோபியின் ரெஸ்டாரெண்டுக்கு வந்துவிடுகிறார்.
கோபி இன்னைக்கு அனுப்ப வேண்டிய மெனுவை கேட்க வரிசையாக 50, 100, 150 எனச் சொல்லிக்கொண்டே செல்கிறார். இதைக் கேட்டு ஷாக்கான ஈஸ்வரி அவ்வளோ பேருக்கெல்லாம் என்னால சமைக்க முடியாது. அவ்வளோ பெரிய ஆள் நான் இல்லை என்கிறார். கோபி, பாக்கியாவை பத்தி புலம்புகிறார்.
இதையும் படிங்க: ‘மின்சாரக்கண்ணா’ படத்திற்கு பிறகு விஜய், கே.எஸ். ரவிக்குமார் சேராததற்கு இதுதான் காரணமா?
இதை தொடர்ந்து ஈஸ்வரிக்கு ஐடியா வருகிறது. வெளியில் சென்று பாக்கியாவுக்கு கால் செய்துவிடுகிறார். எனக்கு தெரிந்தவங்க வீட்டில் ஒரு பங்ஷன். அவங்க வேற கேட்டரிங் சொல்லி இருந்தாங்க. திடீரென அவங்க சமைக்க முடியலை. நீ செஞ்சி தர முடியுமா என்கிறார். இன்னும் ஒருமணி நேரம் தான் இருக்கு அத்தை அதான் யோசிக்கிறேன் என்கிறார்.
ப்ளீஸ் செஞ்சிக்கொடு எனக் கேட்க சரியென பாக்கியா கூறிவிடுகிறார். இதையடுத்து ரிசப்ஷன் பெண்ணிடம் மெனு மற்றும் லோகேஷனை அனுப்ப சொல்கிறார். அவரும் அதை செய்து விடுகிறார். பாக்கியா சமைத்துவிட்டு ஆர்டரை எடுத்துக்க கூறி ஈஸ்வரிக்கு கால் செய்ய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. அதை அடுத்து முகவரி இருப்பதால் பாக்கியாவே ரெஸ்டாரெண்டுக்கு டெலிவரி செய்துவிடலாமா எனக் கேட்க அவரும் பண்ணிடலாம் என்கிறார்.
அவர் உணவுகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். ஈஸ்வரி பாக்கியாவுக்கு கால் செய்ய வர போன் ஆஃபில் இருக்கிறது. பின்னர் சார்ஜ் போட்டு தனியாக வந்து கால் செய்கிறார். பாக்கியா போனை எடுத்து இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவேன் என்கிறார். கோபி சாப்பாடு வந்துவிட்ட சந்தோஷத்தில் வர பாக்கியா ஆட்டோவில் வந்து இறங்குவதை பார்த்து ஷாக் ஆகிறார். ஈஸ்வரியிடம் வந்து என்ன அத்தை இங்க காட்டுது. பங்ஷன் வீடுனு சொன்னீங்க.
இதையும் படிங்க: லைகாவை அலற விட்ட அஜித் குமார்!.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை!.. பம்மிய தயாரிப்பு நிறுவனம்?..
எங்க டெலிவரி செய்யணும்னு சொல்லுங்க என்கிறார். இங்க தான் செஃப் லீவ் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். கோபி இவகிட்ட ஏன்மா ஆர்டர் கொடுத்தீங்க எனக் கேட்க நான் ஆள் வச்சு கொண்டு வந்திரலாம்னு பாத்தேன். அது சொதப்பிட்டு என்கிறார். நீங்க மறைக்க நினைச்சத கடவுள் மாட்டி கொடுத்துட்டாரு என்க இதனால் கோபி கடுப்பாகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.