இன்னும் எத்தனை நாளுக்குப்பா இழுப்பீங்க… கோபியால் கடுப்பான ரசிகர்கள்…

by Akhilan |
இன்னும் எத்தனை நாளுக்குப்பா இழுப்பீங்க… கோபியால் கடுப்பான ரசிகர்கள்…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா ரூமில் இருக்க அப்போது வருகிறார் கோபி. பிசினஸ் எப்படி போகுது எனக் கேட்க நல்லா போகிறது. இப்படியே போனா இன்னொரு பிரான்ச் தொடங்கிடலாம் என்கிறார். நான் கிச்சனுக்கு போனேன்.

அப்போ பாக்கியா என்னை பார்த்து முறைச்சிக்கிட்டே இருந்தா என்கிறார். அவங்களுக்கு நம்ம விஷயம் தெரியும். அதான் என ராதிகா சொல்ல நம்ம கல்யாணம் செஞ்சிக்கிட்டது ஊருக்கே தெரியுமே என கோபி சொல்ல நான் கர்ப்பமா இருக்கும் என்கிறார் ராதிகா. அவளுக்கு எப்படி தெரிஞ்சுது என கோபி கேட்க கேட்டாங்க நான் சொல்லிட்டேன் என்கிறார் ராதிகா.

இதையும் படிங்க: டாப் 5 நடிகைகளின் 50வது படம் வெற்றியா? தோல்வியா?!.. தட்டி தூக்கிய தமன்னா!…

அளவா பேசு என்கிறார் பாக்கியா. அதானே அட்வைஸை காணுமேனு பாத்தேன் என்கிறார். நீ கூடத்தான் பழனிசாமி அங்கிளிடம் பேசுற எனக் கேட்க நான் ஒரே நாளில் பார்த்து பிரண்ட் ஆகலை. எதா இருந்தாலும் நாளைக்கு பேசு என போனை வாங்கி வைக்கிறார். இதையடுத்து சமைக்க கிச்சனுக்குள் நுழைகிறார் ராதிகா.

இதையும் படிங்க: கேட்கிறதெல்லாம் சரிதான்… ஆனா ரோகிணி தான ஜெயிக்கிறாங்க… என்னங்க டைரக்டர் ஐயா!

ஹாலுக்கு வாங்க என அழைக்க இப்போ முடியாது. கால் வலி என்கிறார் ஈஸ்வரி. இதனால் கோபி வெளியில் வந்துவிடுகிறார். யார் இருந்தா என்ன நீங்க சொல்ல வேண்டியது தானே. விஷயத்தினை சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு போயிடலாம். மயூ, நீங்க, நான், பிறக்க போற குழந்தை ஒன்னா இருக்கலாம். எங்க அம்மா துணைக்கு இருப்பாங்க என்கிறார். கோபி ஈஸ்வரியிடம் விஷயத்தினை சொல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story