குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா உண்மையை போட்டு உடைக்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு சோபாவில் உட்காருகிறார். கோபி இப்போ உன்னை இங்க யாரு கூப்பிட்டது என்கிறார்.
நீங்க விஷயத்த எடுத்துக்கிட்டே இருப்பீங்க. என் பசங்களுக்கு வேலை இல்லையா. செழியனுக்கு ஆபீஸ் வேலை இருக்கு. எழிலுக்கு கதை எழுதுற வேலை இருக்கு. இனியாக்கு காலேஜ் வேலைக்கு இருக்கு என்கிறார். உங்களுக்கு நான் பண்ணது உதவி. நன்றி சொல்ல வேண்டாம்.
இதையும் படிங்க: 60 அடியில் இருந்து கீழ விழுந்த சரத்குமார்.. 6 மாத சிகிச்சை!. அந்த படத்துக்கு அவ்வளவு கஷ்டப்பட்டாரா?!
ஆனா திட்டாமல் இருக்கலாம் தானே. இனியா இதான் அன்னைக்கு என் பிரண்ட்ஸூக்கு தம்பி, தங்கச்சி இருக்கானு கேட்டீங்களா என்கிறார். முகத்தினை திருப்பிக்கொண்டு இனியா சென்று விடுகிறார். செழியன் இதான் அன்னைக்கு சீனியருக்கு குழந்தை பிறந்து இருக்குனு கேவலமா கதை சொன்னீங்களா என அவர் சென்று விடுகிறார்.
எழில் பேசாமல் நகர்ந்துவிடுகிறார். ராதிகாவும் எதுவும் பேசாமல் ரூமுக்குள் சென்று விடுகிறார். ஈஸ்வரி நான் அன்னைக்கே சொன்னேன் என் பேச்சைக் கேட்டு இருக்கலாம் இப்ப பாரு உன் புள்ளைங்க முகமே சரியில்லை என்கிறார். ரூமில் ஜெனி யோசித்துக் கொண்டிருக்கிறார். அங்க வரும் செழியன் என் குடும்பத்தை பத்தி தப்பா நினைச்சுறாத என கூறுகிறார்.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசையில் பாக்கியாவாக மாறிய முத்து… ரசிகர்களை பார்த்தா எப்படி தெரியுது?