வீட்டை வெளியே போக சொன்ன எழில்.. முடியாது என அடம் பிடிக்கும் கோபி… என்னங்க பாஸ் இப்படி?

by Akhilan |
வீட்டை வெளியே போக சொன்ன எழில்.. முடியாது என அடம் பிடிக்கும் கோபி… என்னங்க பாஸ் இப்படி?
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவிடம் கோபி புலம்பிக்கொண்டு இருக்கிறார். என் பசங்க ரியாக்‌ஷன் பாத்தியா எவ்வளவோ அசிங்கமா போச்சு தெரியுமா? இனியா ச்சீனு வேற சொன்னா என்னை பாத்து என்கிறார். அதெல்லாம் விஷயம் தெரிந்த உடனே வர இமிடியட் ரியாக்‌ஷன்.

போக போக புரிஞ்சிப்பாங்க என்கிறார். உனக்கு உன்னை பத்தி மட்டும் தான் கவலை. உனக்கு சின்ன குழந்தை. ஆனா என் நிலைமை யோசிச்சியா. என் பசங்களுக்கே பிள்ளை இருக்கு. இனியாக்கு இன்னும் சில வருஷத்துல கல்யாணம் செய்யணும். அப்போ இப்படி நடந்தா என் பசங்களுக்கு கஷ்டமா இருக்காதா என்கிறார்.

இதையும் படிங்க: பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்

அவங்க உங்க அம்மா மாதிரி இல்லை. ரொம்ப மெச்சூரிட்டியோட நடந்துப்பாங்க என்கிறார். நான் வெளிநாட்டில் கூட இல்லை. சென்னையில் இருக்கேன். இங்க இருக்க கலாச்சாரமே வேற என்கிறார் கோபி. ராதிகா பேச வர ப்ளீஸ் ராதிகா நான் புலம்பிக்கிறேன் என்கிறார். ரூமில் பாக்கியா நடந்ததை நினைத்து அழுதுக்கொண்டு இருக்கிறார். அப்போ எழில் வர கண்ணை மூடிக்கொள்கிறார்.

அவர் பாக்கியா அருகில் நின்று கலங்கிவிட்டு செல்கிறார். அடுத்து செழியன் வந்து அவருக்கு முன்னால் நின்று கலங்கிவிட்டு சென்றுவிடுகிறார். பின்னர் கண்ணை திறக்கும் பாக்கியா அழுகிறார். இனியா அம்மா என்று புலம்ப பாக்கியா அவரை சமாதானம் செய்கிறார். வாக்கிங்கில் இருக்கும் எழில், கோபியை சந்திக்கிறார். இனி நீங்க எங்க வீட்டில் இருக்க கூடாது. உடனே உங்க பொண்டாட்டியை அழைச்சிக்கிட்டு கிளம்புங்க என்கிறார்.

இதையும் படிங்க: டேய் சண்டைக்கு வாடா!.. கவுண்டமணி காமெடி உருவானதன் பின்னணி இதுதான்!…

உடனே கோபி என்னால போக முடியாது. நான் எங்க அம்மாக்காக தான் வீட்டில் இருக்கேன். அவங்களும், மற்ற பசங்களும் சொல்லணும். அப்போ தான் போவேன் என்கிறார். உங்களை நான் அனுப்புறேன் எனச் சவால் விட்டு செல்கிறார். வீட்டுக்கு வரும் கோபி, ராதிகாவிடம் எழில் சொன்ன விஷயங்களை புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

ராதிகா நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்கிறார். அம்மாக்காக தான் இருக்கேன். அவங்க சொல்லட்டும் எனக் கூற அவங்களும் சொல்லுவாங்க என ஷாக் கொடுக்கிறார். வீட்டுக்கு வரும் எழில் பார்க்கில் நடந்ததை செழியனிடம் கூறுகிறார். நான் சீக்கிரம் வாக்கிங் போயிட்டு வரேன் எனக் கூறுவதுடன் முடிந்தது.

Next Story