கிளம்புங்க காத்து வரட்டும்… கோபியை துரத்திவிட்ட குடும்பத்தினர்… ஈஸ்வரி அம்மாவே அப்படி சொல்லிட்டாங்களே!..

by Akhilan |
கிளம்புங்க காத்து வரட்டும்… கோபியை துரத்திவிட்ட குடும்பத்தினர்… ஈஸ்வரி அம்மாவே அப்படி சொல்லிட்டாங்களே!..
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி சோபாவில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போ வரும் கோபி, நீங்க சொல்லி தானே. நான் இங்க வந்து தங்கி இருக்கேன். அவன் என்னை எப்படி வெளியில் போக சொல்லலாம் என்கிறார். ராமமூர்த்தி யார் சொன்னா, எதுக்கு தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசுற நீ என்கிறார்.

அப்போ மாடியில் இருந்து எழில் மற்றும் செழியன் இறங்கி வர அவன் தான் சொன்னான் என்கிறார். எழில் நான் தான் தாத்தா அவரை போக சொன்னேன். அவர் இங்க இருக்கது எனக்கு பிடிக்கலை என்கிறார். அவன் சரியா தானே சொல்லிருக்கான் என்கிறார் ராமமூர்த்தி. நீங்க சொல்லுங்கம்மா உங்களுக்காக தானே நான் வந்தேன். இவங்க எப்படி என்னை போக சொல்லலாம் என்கிறார். ஆனால் ஈஸ்வரி அமைதியாகவே நிற்கிறார். எழில் வீட்டை விட்டு கிளம்புங்க எனக் கூற இது நான் கஷ்டப்பட்டு கட்டுன வீடு.

இதையும் படிங்க: நான் நடிச்சிருந்தா இன்னிக்கு அந்த ஹீரோ இருந்திருக்க மாட்டார்! நகுல் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

என்னையே போக சொல்லுற எனப் பேச சமையலறையில் இருக்கும் பாக்கியா அங்கே வருகிறார். பின்னால் அமிர்தா, ஜெனி மற்றும் இனியாவும் வருகின்றனர். இந்த வீடு யாரோட சொன்னீங்க. இது என் வீடு. என்னோட, பசங்களோட காசு, மாமா காசுனு இருக்க எல்லாத்தையும் போட்டு வாங்குனது. ரெஜிஸ்டர் ஆபிஸில் இந்த வீட்டை மாத்திக்கொடுத்தாச்சு. இப்பையும் அதே சொல்றீங்க என்கிறார்.

கடுப்பாகும் கோபி என் மத்த பசங்க அமைதியா இருக்காங்க என்கிறார். செழியன் அவங்க பேசுறது சரினு அமைதியா இருக்கேன். உங்களுக்கு சப்போர்ட்டா இல்லை என்கிறார். இனியாவோ நீங்க இருக்கதே எனக்கு பிடிக்கலை. இந்த வீட்டுக்கு வரதுக்கே பிடிக்கலை எனக் கூறி பாக்கியா பக்கத்தில் சென்று நின்று கொள்கிறார். பாக்கியாவை திட்டும் கோபியிடம் சண்டைக்கு வருகின்றனர் எழில் மற்றும் செழியன். அம்மாக்கு முன்னால் நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சியாகிறார். ஈஸ்வரியும் பசங்க இருக்க வீட்டுல கேவலமா பண்ணிட்டு இருக்க.

இதையும் படிங்க: நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!…

அவங்க எதுவும் பண்ணுறதுக்குள்ள நீ வெளியே போ என்கிறார். இதனால் அங்கிருக்கும் ராதிகாவும் டிரெஸை எடுத்துவைக்க மாடிக்கு செல்கிறார். அப்போ வரும் கோபி பசங்க பேசியதை நினைத்து புலம்பிக்கொண்டு இருக்க நான் கிளம்புறேன். நீங்க வரீங்களா இல்லையா எனக் கேட்கிறார். அம்மாக்கிட்ட பேசவா எனக் கேட்க வெளியில் போனு சொன்னதுக்கு அப்புறம் என்ன கெஞ்சவா போறீங்க. இல்லை வரேனு சொல்லிட்டு வருவதாக கீழே வருகிறார்.

பின்னர், எழில், செழியன் மற்றும் பாக்கியா பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் ராமமூர்த்தி நான் ஒருமுறை தான் ஈஸ்வரி பக்கம் நின்னேன். எல்லாத்துக்கும் சப்போர்ட் செய்ய மாட்டேன். அவன் வெளியில் போறது தான் சரி என்கிறார். சாரி மாமா. அவரை நிறைய சகிச்சிக்கிட்டு போயிட்டேன் எனக் கூற பரவாயில்லை மா. இது உன் வீடு. நாளைக்கே நீ எங்களை போக சொன்னாலும் போய் தான் ஆகணும் என்கிறார். இதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story