Connect with us

Cinema News

ராதிகா வீட்டில் ஈஸ்வரிக்கு முதல் நாளே அமோகமா இருக்கே… தேவைத்தான்!… இனிமே தானே இருக்கு…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி மற்றும் ராதிகாவுடன் ஈஸ்வரி வருவதை பார்த்து ராதிகாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார். பின்னர் இருவரும் முறைத்துக் கொண்டு நிற்கின்றனர். ராதிகா அம்மா காபி போடுவதாக கிச்சனுக்கு சென்று ராதிகாவை இங்கே வரும்படி அழைக்கிறார்.

நீ வந்த சரி. மாப்பிள்ளை வந்தால் சரி. அந்த அம்மா எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க என கேட்க, வீட்டில் நடந்த விஷயங்களை தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார் ராதிகா. இதற்கு எல்லாம் காரணம் கோபி தான். நான் பண்றது அந்த அம்மா ரெண்டு நாள்ல வீட்டை விட்டு ஓடிப் போயிடும் என கூறுகிறார் கமலா.

இதையும் படிங்க: சிவாஜி படத்தில் நாகேஷூக்கு வந்த சிக்கல்… ஆனா எம்ஜிஆரோ அந்த விஷயத்துல கில்லாடி..!

சண்டை போட்றாதம்மா என ராதிகா கேட்க வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேன். ஆனா நான் செய்ததிலேயே அந்த அம்மா போயிடும் என்கிறார். ஹாலில் இருக்கும் ஈஸ்வரி கோபியிடம் அந்த அம்மா எதுக்கு இங்க இருக்கு அதை வெளியில போய் சொல்லு என கூறுகிறார். உடனே கோபி யாரும் வெல்ல போவாதாமா நம்ம எல்லாம் ஒரே குடும்பமாக இருக்கலாம் என சமாதானம் செய்கிறார்.

நீங்கள் இந்த வீட்டிலே மகாராணி மாதிரி இருக்கலாம் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் நான் பார்த்துக்கிறேன் என்கிறார் கோபி. பாக்கியா வீட்டில் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போ அமிதா தாத்தாவிடம் நீங்களாவது சொல்லி பாட்டியே இருக்க வச்சிருக்கலாம்ல என்கிறார். இனியா அந்த வீட்ல ஒரு நல்ல ரூம் கிடையாது. அவங்க சாப்பாடு சரியா இருக்காது.

பாட்டியால் அந்த வீட்டில் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது என்கிறார். ராமமூர்த்தி அவளை பட்டா அவளை திரும்பி வருவார். அதுவரை நான் நிம்மதியா இருக்கேன் எனக்கூறி எல்லோரையும் சாப்பிட சொல்கிறார். ஹாலில் உட்கார்ந்திருக்கும் ஈஸ்வரி, தண்ணி கேட்க அதை ராதிகாவின் அம்மா கண்டுகொள்ளாமல் செல்கிறார். கத்தி கத்தி பார்த்து கடுப்பான ஈஸ்வரி அவரே கிச்சனுக்கு சென்று தண்ணி எடுத்து குடிக்கிறார். 

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

ராதிகா எங்கே என கேட்க அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறாள் என்கிறார். பால் இருக்கா என கேட்க அதையும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்க இவரை தேடி பார்க்கும்போது கிண்ணத்தில் இருந்த பால் கீழே கொட்டி வீணாகி விடுகிறது. வேற பால் இருக்கா என கேட்க இல்லை என கூறி விடுகிறார் ராதிகாவின் அம்மா.

கடுப்பில் ஈஸ்வரி வெளியே போக இதை யார் கிளீன் செய்வா என கேட்கும் போது நீ பண்ணல உன் பொண்ண பண்ண சொல்லு என அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார். நீங்கள் வந்தது எனக்கு பிடிக்கவே இல்லை என ராதிகாவின் அம்மா கூற நான் கொஞ்ச நாள்ல போயிடலாம் என்று ஐடியால தான் வந்தேன். ஆனா நீ எப்ப சொன்னியோ அங்கே நிரந்தரமா தங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்கிறார். பின்னர் கோபி மற்றும் ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அம்மாக்கு மாடியில் ரூம் போடலாமா என ராதிகா நக்கலாக கூற அதை புரிந்து கொள்ளாத கோபி அம்மாக்கு கால் வலி இருக்கே என்கிறார். லிஃப்ட் போடலாமா எனக்கு கூறும்போது இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே என்கிறார் கோபி. நம்ம பிளாட்ல இருக்கோம் என ராதிகா கடுப்படிக்கிறார். பின்னர் வீட்டில் செழியன், ஜெனிக்கு சாக்லேட் கொடுத்து இனிமே மாலினி பத்தி பேசவேண்டாம்.  நம்ம வாழ்க்கையை பார்ப்போம் என சமாதானம் செய்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top