Connect with us

Cinema News

இனியாவை வச்சு காய் நகர்த்தலாம் பாத்தா இப்படி பல்பா கோபி… முடிச்சிவிடுங்கப்பா!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி ரூமில் இனியா குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்கிறார். அதன்பின் குழந்தையை நான் என் ரூமில் கொஞ்ச நேரம் வச்சி இருக்கேன் எனத் தூக்கி செல்கிறார். பின்னர் செழியன் வாட்ஸ் அப் குரூப்பில் மெசேஜ் வருகிறது.

பாண்டிச்சேரி செல்ல நண்பர்களுடன் பிளான் போட்டு இருப்பதாக கூறுகின்றனர். நீயும் போறியா செழியா என்கிட்ட சொல்லவே இல்ல என்கிறார் ஜெனி. எழிலிடம் சொன்னேன் ஜெனி. அதை உன்னிடம் சொன்னதா தப்பா நினைச்சிக்கிட்டேன் என்கிறார். நீ இந்த ட்ரிப்புக்கு போக வேண்டாம் என்கிறார் ஜெனி. வரேன் சொல்லிட்டனே என செழியன் இழுக்க அதெல்லாம் தேவையில்ல.

இதையும் படிங்க: பேனர் கிழிக்கத்தான் தெரியும்!.. பாக்ஸ் ஆபிஸில் கில்லியை தொடக் கூட முடியாத தீனா மற்றும் பில்லா!..

நானும், பாப்பாவும் இங்க இருக்கும் போது நீ ட்ரிப்புக்கு போவியா என்கிறார். வரலைனு சொல்லிடு என்கிறார். இதையடுத்து ஒன்றும் சொல்ல முடியாத செழியன் சரியென சொல்லிவிடுகிறார். பின்னர் கோபி வந்த ஹாலில் உட்காருகிறார். அப்போ ஈஸ்வரியை வெளியில் போகலாம் என அழைக்க அந்த நேரத்தில் அவருக்கு கால் வருகிறது. நாளைக்கு செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா என பேசுகிறார்.

ராமமூர்த்தி மற்றும் இனியா இருக்கின்றனர். செழியன் குழந்தைக்கு நாளைக்கு பெயர் வைக்கும் விழாவா எனப் பேச்சு வர ராமமூர்த்தி ஆமா நாளைக்கு தான் பங்ஷன். நீ பொறுப்பான தாத்தாவா வந்து நில்லு என்கிறார். இனியா டாடிய தாத்தானு சொல்றதும் கியூட்டா தான் உள்ளதாக கூறுகிறார். பாக்கியாவை இனியா கடைக்கு செல்ல வேண்டும் என அழைக்கிறார். உடனே கோபி தான் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி இனியாவை காரில் அழைத்து சென்று கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்க செஞ்சது ரொம்ப பெரிய தப்பு!.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பயில்வான்!..

காலேஜ் எல்லாம் எப்படி செல்கிறது என கேட்க நல்லா போது டாடி என்கிறார். உனக்கு வீட்ல எப்படி பொழுது போகுது என கேட்க அதான் நிலா இருக்காளே. இப்போ செழியன் அண்ணாவோட குழந்தையும் வந்துட்டு என்கிறார். உனக்குனு ஒரு தம்பி பாப்பாவோ தங்கச்சி பாப்பாவும் இருந்தா எப்படி இருக்கும் என்கிறார் கோபி. ஏன் மயூவை வீட்டுக்கு கூட்டிட்டு வர போறீங்களா. அப்படிலாம் எதுவும் செஞ்சிடாதீங்க. ராதிகா ஆன்ட்டி இங்க இருக்கறதே எனக்கு பிடிக்கல என்கிறார்.

உங்க காலேஜ்ல யாருக்கும் குறைஞ்ச வயதில் தம்பி பாப்பா இல்லையா என்கிறார் கோபி.  எங்க காலேஜ்ல ஒரு பையனுக்கு 10 வயசு வித்தியாசத்தில் தம்பி இருக்கான் அதுக்கே கலாய்க்கிறாங்க என்கிறார் இனியா. சரி மத்தவங்க கிட்ட கொஞ்சம் பார்த்து பத்திரமா நடந்துக்கோ என்கிறார் கோபி. நீங்க மட்டும் சரியா எனக் கேட்கும் இனியா, ராதிகா ஆண்ட்டிய கல்யாணம் செய்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சிருக்கீங்க.

அம்மாவுக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும் என பதிலடி கொடுக்கிறார். இதனால் இனி்யாவிடம் விஷயத்தினை சொல்லாமல் விடுகிறார் கோபி. இதையடுத்து, கிச்சனில் ஜெனிக்காக பாக்கியா ஜூஸ் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவர் முடித்து வெளியில் வரும் சமயம் ராதிகா உள்ளே வர கரண்ட் கட் ஆகிவிடுகிறது. சரி அப்புறம் வந்து போட்டுக்கலாம் என ஜெனிக்கு போட்ட ஜூஸை ராதிகாவிடம் கொடுக்கிறார் பாக்கியா. இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? மறுபடி ஹீரோவை காலி செய்ய காத்திருக்கும் சிறகடிக்க ஆசை!

google news
Continue Reading

More in Cinema News

To Top