பாக்கியாவுக்கு வந்த புது ஆப்பு… காபிக்காக ஈஸ்வரியை கத்தவிட்ட ராதிகா… இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ?

by Akhilan |
பாக்கியாவுக்கு வந்த புது ஆப்பு… காபிக்காக ஈஸ்வரியை கத்தவிட்ட ராதிகா… இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ?
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழிலாக நடித்த விஜே விஷால் மாற்றப்பட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து அவர் தயாரிப்பாளருக்கு கதை சொல்ல போகும் போது ராமமூர்த்தி மற்றும் பாக்கியா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். பின்னர் ராமமூர்த்தியிடம் பேசிவிட்டு கிளம்புகிறார்.

ராமமூர்த்தியிடம் நான் வீட்டில் இருக்கேன் என பாக்கியா கூற வேண்டாமா? நான் பார்த்துக்கிறேன் எனக் கூற அமிர்தா இருக்கட்டும் என்கிறார். பின்னர் அன்று செய்ய வேண்டிய வேலைகளை ஜெனியிடம் சொல்லி அமிர்தாவிடம் சொல்ல சொல்கிறார். பின்னர் நீ மறந்துடுவ எனக் கூற பேப்பரில் வேலைகளை எழுதி அதையும் டேபிள் மீது வைத்துவிட்டு எழுந்திருக்கிறார். ஜெனி நான் இதை கூட கொடுக்க மாட்டேனு நினைச்சீங்களா எனக் கேட்க அப்படியெல்லாம் இல்ல. நீ குழந்தையை பாருமா எனச் சொல்லிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதைக் கவனிச்சீங்களா?.. இவ்ளோ விஷயங்கள் இருக்கா?..

இதனால் கவலையில் இருக்கும் ஜெனி ரூமில் இருக்கும் போது நான் பார்க்கிறதுக்கு ஓகேவா எனக் கேட்க நீ பார்கிறது நல்லா இருக்க என்கிறார். அது இல்ல, நான் வீட்டு வேலைகளை செய்ய மாட்டேனா அமிர்தா மாதிரி எனக் கேட்க அதெல்லாம் உனக்கு சரி வராது. அமிர்தாவுக்கு பழக்கம் இருக்கு. அதை பற்றி கவலைப்படாதே என்கிறார்.

இதையடுத்து கமலா, ராதிகா மற்றும் மயூவுக்கு காபி வந்து கொடுக்கிறார். பேசிக்கொண்டு இருக்கும் போது ஈஸ்வரி தூங்கி எழுந்துவந்து காபி எனக் கத்திக்கொண்டு இருக்கிறார். ராதிகா போக பார்க்க அவரை அமைதியாக்கி உட்கார வைக்கிறார். ரொம்ப சத்தம் கேட்க என்னவென்று கேட்க காபி எனக் கேட்க பெயரை சொல்லி கூப்பிட்டா தான் வருவோம். காபினா வருமா என நக்கலாக கேட்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி சொன்னது கண்ணதாசனுக்கு அப்படியே பலித்தது.. அட அதுவா விஷயம்?!..

பாக்கியா ரெஸ்டாரெண்டில் பேசிக்கொண்டு இருக்கும் போது அருகில் ஒரு கடை இருப்பதை பார்க்கிறார். அந்த ஓனருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அது பார் என தெரிய அதிர்ச்சி அடைகிறார். இதனால் குழம்பி ஹோட்டலுக்குள் வரும் பாக்கியா அருகில் பார் வருவதை செல்வியிடம் சொல்கிறார். பின்னர் அது நடக்காமல் இருக்கணும் எனக் கூற இத்துடன் முடிந்தது.

Next Story