சிவாஜி சொன்னது கண்ணதாசனுக்கு அப்படியே பலித்தது.. அட அதுவா விஷயம்?!..

1951ம் ஆண்டு பராசக்தி வசனத்துக்குக் கதை வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி மூலமாகவே சிவாஜிக்கும், கண்ணதாசனுக்குமான நட்பு ஏற்பட்டது. கருணாநிதியைத் தேடி அவரது ரசிகன் முத்தையா (, காரைக்குடியில் இருந்து வருகிறேன் என்றாராம். அப்போது அருகில் இருந்த சிவாஜிக்கு அவரை அறியாமலேயே அப்போது கண்ணதாசனின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாம்.

சிவாஜியின் ஆசைப்படி பராசக்தி படத்தில் கண்ணதாசன் நீதிபதியாகவும் நடித்தாராம். சிவாஜியின் திருமணம் நடந்த போது 'கவிஞர் தான் தனக்குத் தாலி எடுத்துத் தர வேண்டும்' என்று சொன்னாராம். அப்போது கருணாநிதியும், கண்ணதாசனும் சென்னையில் இருந்து வந்தார்களாம்.

இதையும் படிங்க... குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதைக் கவனிச்சீங்களா?.. இவ்ளோ விஷயங்கள் இருக்கா?..

அதன்பிறகு கண்ணதாசன் தாலியை எடுத்துக் கொடுத்ததும் தான் சிவாஜியின் திருமணமே நடந்ததாம். கண்ணதாசன், கருணாநிதி நட்பானது கண்ணதாசன், சிவாஜியின் நட்பாக மாறியது.

'கண்ணதாசன் தனது திரைப்படங்களில் பாடல் எழுதக்கூடாது' என எந்த இயக்குனர்களிடமும் சொல்லவில்லை. கண்ணதாசன் கதை, வசனம் எழுதிய தெனாலிராமன், நானே ராஜா படங்கள் வெற்றி பெற்றன. வீரபாண்டிய கட்டபொம்மனுடன் சிவகங்கைச் சீமை என்ற கண்ணதாசனின் படமும் வந்தது. அது தோல்வியைத் தழுவ, இனி அவர் திரைப்படங்கள் எடுக்க வேண்டாம். பாடல்களை மட்டும் எழுதச் சொல்லுங்கள் என கண்ணதாசனின் நண்பர்களிடம் சிவாஜி கேட்டுக் கொண்டாராம்.

அதன்பிறகு பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, படிக்காத மேதை, பாசமலர், பெற்றமனம், விடிவெள்ளி ஆகிய படங்களில் சிவாஜி, கண்ணதாசனின் கூட்டணி களைகட்டியது. பாலும் பழமும் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் 'என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?' பாடல்.

இதற்கான கம்போசிங்கை சிவாஜி தனது அன்னை இல்லம் வீட்டில் பார்த்தார். பின் இரவு 10.30 மணி என்று கூட பாராமல் கண்ணதாசனுடன் போனில் நேரில் வந்து பார்ப்பதாகக் கூறினாராம். 'இப்ப என்ன? நாளைக்கு வந்து பார்க்கலாமே' என்றாராம். 'இப்ப நா வரட்டுமா? இல்ல நீ வாரீயா?' என கேட்ட சிவாஜியைப் பார்த்து நானே வருகிறேன் என்றாராம் கண்ணதாசன்.

இதையும் படிங்க... முதல்ல மோடி பயோபிக் ஓடுமா? என்னது சத்யராஜ் நடிச்சிட்டாரா? அப்போ இது பார்ட் 2 வா?

அப்படி அவர் நேரில் வந்ததும் அவரை ஆரத்தழுவி வரவேற்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அதோடு நில்லாமல் முத்தங்களும் இட்டுள்ளார். 'இனி என் படங்களுக்கு நீ தான் பாடல் எழுதப் போகிறாய்' என்று சிவாஜி சொன்னது கண்ணதாசனுக்கு அப்படியே பலித்து விட்டதாம். அதன்பிறகு தொடர்ந்து பாடல் எழுத சிவாஜி படங்களாக கண்ணதாசனுக்கு வந்து குவிந்து விட்டதாம்.

 

Related Articles

Next Story