முதல்ல மோடி பயோபிக் ஓடுமா? என்னது சத்யராஜ் நடிச்சிட்டாரா? அப்போ இது பார்ட் 2 வா?
இந்தக் காலகட்டம் இந்திய சினிமாவில் பயோபிக் காலகட்டம். காரணம் என்னன்னா கதை இல்லாம பல பேரு தடுமாறிக்கிட்டு இருக்காங்க. தலைவர்களோட வாழ்க்கை வரலாறு தான் பயோபிக். இது ஓடுமா, ஓடாதான்னு சந்தேகம் வருது. ஏன்னா நாம பார்க்காத தலைவர்களோட பயோபிக்கே ஓடல. இந்த நிலையில் மோடியோட பயோபிக்ல சத்யராஜ் நடிப்பாரா, மாட்டாரான்னு ஒரு விவாதம் நடந்துக்கிட்டு இருக்கு. நடிக்க மாட்டாருங்கறதுக்குத் தான் 90 சதவீதம் வாய்ப்பு இருக்கு.
சத்யராஜ் பெரியாரின் தொண்டர். அவர் பெரியாராகவே நடித்தும் விட்டார். அதனால் மறுமுனையில் உள்ள மோடியாக நடிக்க மாட்டார். சத்யராஜ் மட்டும் தான் ரஜினி, கமல் காலகட்டத்தில் இருந்து இன்று வரை நடித்து வருகிறார். அதற்குக் காரணம் அவர் எந்த வேடத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்வார். வில்லன், நகைச்சுவை, கேரக்டர் ரோல் என எதைச் செய்தாலும் பரபரப்பாக செய்பவர்.
இதையும் படிங்க... பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட்!. ஆனாலும் வாய்ப்பே இல்ல.. டி.எம்.எஸ் தொடர்ந்து பாடாத காரணம்!..
9 ருபாய் நோட்டு படம் பார்த்தால் அழுகாதவர்களும் அழுது விடுவார்கள். தகடு தகடுதான், என்னம்மா கண்ணுன்னு அவர் வில்லத்தனத்துடன் கிண்டல் செய்யும் கேரக்டர் என்றாலும் மாஸாகத் தான் இருக்கும்.
சத்யராஜ்கிட்ட இதைப் பற்றிக் கேட்கும்போது அப்படியா நான் இப்ப தான் அந்த செய்தியவே கேள்விப்படுறேன்னு சொல்றாரு. அதே நேரம் எம்ஆர்.ராதா நாத்திகம் தான் பேசினாரு. பின்னாடி ஆன்மிக வேடங்கள்ல நடிக்கலையான்னு ஒரு புள்ளியையும் வச்சிருக்காரு. அப்படின்னா நான் வந்து நாத்திகம் பேசுவேன். மோடியா நடிக்கச் சொன்னா நடிக்கப் போறேன். நான் நடிகன் தானே.
அவர் நான் நடிக்க மாட்டேன்னு எந்த வார்த்தையும் சொல்லல. அதே நேரம் அவரது திரைத்துறை நண்பர்களிடம் விசாரித்தால் மோடி பயோபிக்ல நடிச்சிட்டாரேன்னு சொல்றாங்க. அது எப்போ ரிலீஸ் ஆச்சுன்னு கேட்டா அமைதிப்படை 2 நாகராஜசோழன் படம் தான்னு சொல்றாங்க. இப்போ மோடி பயோபிக் 2 ரிலீஸ் ஆகப் போகுதான்னும் கேட்குறாங்க. மோடியைப் பொறுத்தவரை தினமும் ஒரு எபிசோட் அவர் நடிச்சிக்கிட்டுத் தான் இருக்காரு.
ஏழைத்தாயின் மகன் நிறைவா வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருக்காரு. அவரது உடையின் மதிப்பே 10 லட்ச ரூபாய். தினமும் நடிக்கிற அவருக்கு தனியா ஒரு பயோபிக் தேவையா? அப்படி எடுத்தா படம் ஓடுமான்னு கேள்வி எழுது. மற்றபடி சத்தியராஜ் நடிக்கிறதும் நடிக்காததும் அவரோட இஷ்டம்’ என பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம், இந்த செய்தி முழுக்க வதந்தியே. நான் யாருடைய பயோபிக்கிலும் நடிக்கவில்லை என சத்தியாரஜ் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.