ட்ராமா போடும் ஈஸ்வரி.. கடுப்பில் ராதிகா மற்றும் கமலா… குழம்பி போய் நிற்கும் கோபி! தேவைதான்…

by Akhilan |
ட்ராமா போடும் ஈஸ்வரி.. கடுப்பில் ராதிகா மற்றும் கமலா… குழம்பி போய் நிற்கும் கோபி! தேவைதான்…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி வீட்டு ஹாலில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்திருக்கிறார். ஜாக்கிங் சென்று வரும் கோபி வெளியில் ஒரே வெயில் என புலம்பிக்கொண்டே வந்த அருகில் அமர்கிறார். அப்போ அங்கு வரும் ராதிகாவின் அம்மா இருவருக்கும் காபியை நீட்டுகிறார். எனக்கு வேண்டாம் என ஈஸ்வரி கூற, ஏன்மா உங்களுக்கு காபி குடிக்கலைன்னா தலைவலி வருமே என்கிறார்.

ஏற்கனவே வந்துட்டு. ஒரு மணி நேரமா கேட்டுகிட்டு இருக்கேன் யாருமே கண்டுக்கல என புகார் பத்திரம் வசிக்கிறார். உடனே கமலா உங்க அம்மா இன்ஸ்டன்ட் காபி குடிக்க மாட்டாங்க. பில்டர் காபி போட நேரம் ஆகிட்டு என்கிறார். அப்போ ராதிகா அங்கு வர அவரை திட்டுகிறார் ஈஸ்வரி. அடுத்ததாக எழில் கதை சொல்லி விட்டு வெளியே வர வாசலில் காத்திருக்கிறார் பாக்கியா. என்னம்மா இங்கே நிற்கிறாய் எனக் கேட்க எனக்கு பயமா இருந்துச்சுடா. அதான் இங்க வந்து நின்று இருக்கேன் என்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு அவர் எப்படியோ கேப்டனுக்கு இவரு!.. விஜயகாந்தின் காட்ஃபாதர் இவர்தானாம்!….

சரி உள்ள என்ன நடந்துச்சு என கேட்க, எல்லாம் ஓகே. இன்னும் ரெண்டு மாசத்துல படத்தை ஸ்டார்ட் பண்ணி விடலாம் என்று சொல்லி இருக்காங்க என்கிறார். இதனால் பாக்கியா ரொம்பவே சந்தோஷப்பட நீ கிடைச்சதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கேன் என்கிறார் எழில். சரி வா வீட்டுக்கு போவோம். அமிர்தா கிட்ட நீயே வந்து சொல்லு, அவ ரொம்ப சந்தோஷப்படுவா என்கிறார். அடுத்து, கோபியை அழைத்துக்கொண்டு ரூமிற்குள் செல்கிறார் ராதிகா.

அங்கே கமலா காத்திருக்க இருவரும் ஈஸ்வரி செய்யும் அட்டகாசங்களை குறித்து வரிசையாக புகார் கூறிக் கொண்டிருக்கின்றனர். புள்ளத்தாச்சியே எப்ப பாத்தாலும் கருவ கலச்சிடுன்னு சொல்றதெல்லாம் நியாயமா இருக்கா. பாலை கொட்டிட்டு எங்கள துடைக்க சொல்றாங்க என வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். இதனால் கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். ஓரளவுக்கு மேல் தாங்காமல் ரூமை திறந்து கொண்டு வெளியே செல்ல அங்கு நிற்கிறார் ஈஸ்வரி.

இதையும் படிங்க: ரூம் விஷயத்தில் புதிய வெடியை கிள்ளி போட்ட பாட்டி… அடுத்த ரவுண்ட் என்ன நடக்குமோ?

கேட்டிருப்பாரோ என்ற ரீதியில் நெருங்கப் போக மயக்கம் ஆகிவிடுகிறார் ஈஸ்வரி. இதனால் பதறும் கோபி அவரை பிடித்து தண்ணீர் தெளித்து எழுப்பி ஹாலில் உட்கார வைக்கிறார். ஹாஸ்பிட்டல் போலாம் என கேட்க சமாளிக்கிறார். நான் இன்னும் சாப்பிடலை அதான் லோ சுகர் எனக் கூற ஏன் சாப்பாடு கொடுக்கலை. ஒன்பது மணி ஆயிட்டே, அம்மா 8.30க்கு சாப்பிட்டு மாத்திரை போட்டு இருக்கனுமே என்கிறார்.

எனக்கு எப்படி தெரியும் என கமலா கூற இதெல்லாம் ராதிகாவுக்கு நல்லா தெரியும் என்கிறார் கோபி. அவளுக்கே அவள பாத்துக்க முடியல இதுல உங்க அம்மாவை எப்படி பார்த்துப்பா என நக்கல் செய்கிறார். இதனால் கடுப்பாகும் கோபி தானே சென்று சமைத்து வருவதாக உள்ளே செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story