Connect with us

Cinema News

டிராமா போட்டு அழுக விடும் ஈஸ்வரி… கதிகலங்கி நிற்கும் ராதிகா… நிம்மதியா இருக்கும் பாக்கியா..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரிக்கு சாப்பாடு வந்து கொடுக்கிறார் கோபி. சாப்பிடும் ஈஸ்வரியிடம் நான் ரெஸ்டாரெண்ட் சென்று வருவதாக கூற என்னை எதுவும் செஞ்சிடுவாங்கனு பயமா இருக்கு என தடாலடியாக நடிக்கிறார். அப்படிலாம் எதுவும் நடக்காது. நான் சீக்கிரம் வந்துவிடுவதாக கூறி செல்கிறார். கோபி கிளம்பியவுடன் கால் மேல் கால் போட்டு சீன் போடுகிறார். இதை பார்த்து ராதிகா ஷாக் ஆகிறார். பின்னர் அமிர்தா தாத்தாவிற்கு சாப்பாடு கொடுப்பது தெரியாமல் ஜெனி சாப்பாடு எடுத்து வருகிறார்.

இதை பார்த்த ஜெனி கடுப்பாகிவிடுகிறார். வெளியில் வரும் அமிர்தாவிடம் நான் சாப்பாடு கொண்டு வந்தேன். நீங்க கொடுத்துட்டு இருக்கீங்க என்கிறார். கேட்ருக்கலாமே என அமிர்தா கூற ஏன் உங்களிடம் கேட்டு தான் கொடுக்கணுமா என ஜெனி கேட்க இல்ல தாத்தாவிடம் கேட்ருக்கலாமே சாப்பிட்டீங்களா எனக் கேட்கிறார். அமிர்தா என்ன ஆச்சு ஜெனி ஒருமாதிரி பேசுறீங்க எனக் கேட்க ஒன்னும் இல்ல எனக்கூறி ரூமுக்குள் செல்கிறார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

அடுத்ததாக, ராதிகாவிற்கு கமலா ஆப்பிள் கட் செய்து வைத்திருக்க அதை ஈஸ்வரி எடுத்து சாப்பிடுகிறார். இது ராதிகாவிற்கு என கமலா கூற இதில் பேர் இல்லையே என்கிறார். உடனே அங்கு வரும் ராதிகா உங்களுக்கு ஏற்கனவே சுகர் இருக்கு. ஆப்பிள் சாப்பிட்டு சுகர் அதிகமாகி மயக்கமான கோபி எங்களை தான் ஏதாவது சொல்லுவாரு என தட்டை பிடித்துக் கொள்கிறார். இதை எடுத்து கோபிக்கு கால் செய்யும் ஈஸ்வரி நான் சாப்பிட தட்ட கூட புடுங்கிட்டாப்பா. எல்லாம் ராதிகா தான் என போட்டு விடுகிறார்.

இதனால் கோபி, ராதிகாவுக்கு கால் செய்து அவரை பேசவிடாமல் கண்டபடி பேசிவிட்டு போனை வைக்கிறார்.  கடுப்பான ராதிகா அவரிடமே தட்டை கொடுக்க எனக்கு ஆப்பிள் வேண்டாம் எனக்கு சுகர் இருக்கு என பிளேட்டை மாற்றி ஈஸ்வரி பேச ஷாக் ஆகிவிடுகிறார். பின்னர் எழில் மற்றும் பாக்கியா வீட்டில் இருப்பவர்களிடம் ப்ரொடியூசர் கதைக்கு ஓகே சொல்லிவிட்டதாக படம் சீக்கிரம் தயாராகும் என சந்தோஷமான விஷயத்தை கூறுகின்றனர். இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷம் அடைகின்றனர். பாட்டிக்கு சொல்லலாம் என எழில் கால் செய்ய அந்த போனை எடுக்காமல் இருக்கிறார் ஈஸ்வரி.

இதையும் படிங்க: ஆச்சி மனோரமாவை நம்ப வைத்து ஏமாற்றினாரா நாகேஷ்!.. வெளியே வந்த ரகசியம்!..

பின்னர், ராம மூர்த்தி மொபைல் இருந்து ஈஸ்வரிக்கு கால் செய்கிறார் எழில். அந்த போனை ஈஸ்வரி எடுக்க என் போன்ல இருந்து போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறீங்க என கலாய்க்கிறார். பின்னர் ப்ரொடியூசரிடம் கதை ஓகே செய்யப்பட்ட விஷயத்தை அவரிடம் கூறுகிறார். ஈஸ்வரி சந்தோஷம் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார். நீ பிள்ளை பெத்துக்கிட்டா இன்னும் சந்தோஷமா இருப்பேன் என எழிலிடம் கூற நல்லா சாப்பிடுங்க.

உடம்ப பாத்துக்கோங்க, போர் அடிச்சா கிளம்பி வந்துருங்க எனக்கூறி எழில் போனை வைத்து விடுகிறார். அதை பார்த்துக் கொண்டிருக்கும் கமலா அடுத்தவங்கள குழந்தை பெத்துக்கு சொல்றது சொந்த பையன் குழந்தையை கலைக்க சொல்றது என முகத்தில் அடித்த போல பேசுகிறார். இதைக் கேட்கும் ஈஸ்வரி நான் வேற யாரையும் சொல்ல என் பேரனிடம் தான் சொன்னேன் என பதிலடி கொடுப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top