ஜெனியால் மயங்கி விழுந்த ராமமூர்த்தி.. பதறிய குடும்பத்தினர்… கோபியை அலற விடும் ஈஸ்வரி…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி அசந்து தூங்கிவிட ராமமூர்த்தியும் தூங்கி எழுந்து கொள்கிறார். பசி எடுத்ததால் ஜெனி அழைத்து பார்க்க அவர் தூங்கிறார் என தெரிந்ததும் ராமமூர்த்தியே சாப்பிட செல்கிறார். மாத்திரை எடுத்து சாப்பிட பார்க்க ராமமூர்த்திக்கு எதுவென தெரியாமல் போகிறது.
அதனால், மாத்திரை போடாமலே சாப்பிட்டுவிடுகிறார். அடுத்ததாக, பாக்கியா ரெஸ்டாரெண்ட்டில் பார் திறப்பு விழாவுக்கு மளிகை சாமான்கள் எழுதி கொண்டு இருக்கின்றனர். அங்க போய் ஆர்டர் எடுத்துட்டு வந்துருக்க, குடிச்சிட்டு வந்து பிரச்னை பண்ணுவாங்க என்கிறார். நாளைக்கே இதெல்லாம் நடக்குற மாதிரி பேசுறீங்க. அதெல்லாம் எதுவும் இல்லை என்கிறார் பாக்கியா.
இதையும் படிங்க: இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..
லிஸ்ட்டை கொடுத்துவிட்டு பாக்கியா நான் வீட்டுக்கு போய் ஜெனி என்ன செய்றா என பார்த்துவிட்டு வருவதாக செல்கிறார். ஜெனியும் தூங்கி எழுந்துவந்து பார்க்க தாத்தா தூங்கி கொண்டு இருக்கிறார். கிச்சனில் பார்க்க ராமமூர்த்தி சாப்பிட்ட தட்டு இருப்பதால் சாப்பிட்டு இருக்கிறார் என நினைத்து கொள்கிறார் ஜெனி.
அந்த நேரத்தில் பாக்கியா வந்து மாமா சாப்பிட்டாரா எனக் கேட்க சாப்பிட்டு இருக்கார். ஆனா மாத்திரை சாப்பிட்டாரானு தெரியலை. நான் தூங்கிட்டேன் என்கிறார். ரூமில் சென்று பார்க்க மாத்திரை போடாமல் இருப்பதை பார்த்து ராமமூர்த்தியை எழுப்புகிறார். ஆனால் அவர் மயக்கத்தில் இருப்பதால் ஜெனி அழுக தொடங்குகிறார்.
இதையும் படிங்க: பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை!.. அதிரடி காட்டும் தனுஷ்.. ராயன் படத்தின் மாஸ் அப்டேட் இதோ!..
பின்னர் எழிலை அழைத்து ஆட்டோவில் ஹாஸ்பிட்டல் அழைத்து கொண்டு போகிறார். வீட்டுக்கு வரும் ராமமூர்த்தியிடம் அழுதுக்கொண்டே இருக்கும் ஜெனி மன்னிப்பு கேட்கிறார். அதெல்லாம் எதுவும் இல்லம்மா விடு எனக் கூற நான் தான் தெரியாம தூங்கிட்டேன் என்கிறார். அமிர்தா விடுங்க. குழந்தைகள் இருக்கும் இடத்தில் இது சாதாரணம் தான் என்கிறார்.
இதையடுத்து, ராதிகா வீட்டில் அவருக்கு கமலா வந்து காபியை கொடுக்க அவங்களுக்கும் கொடுக்கணும் எனக் கூற கமல் ஈஸ்வரிக்கும் கொண்டு சென்று கொடுக்கிறார். ஆனால் காப்பி நல்லா இல்லை என்கிறார் ஈஸ்வரி. அதை கமலா வாங்கி கீழே கொட்டி விட்டு ஈஸ்வரி மீது பழி போடுகிறார். ராதிகாவும் வந்து ஈஸ்வரியை திட்டுகிறார். உடனே கோபிக்கு கால் செய்து வீட்டுக்கு வர சொல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.