எனக்கு சுயமரியாதை இருக்கு…கலங்கும் பாக்கியா.. பயத்தில் கோபி… கோபத்தில் ராதிகா…

by Akhilan |   ( Updated:2024-05-09 06:48:43  )
எனக்கு சுயமரியாதை இருக்கு…கலங்கும் பாக்கியா..  பயத்தில் கோபி…  கோபத்தில் ராதிகா…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செல்வியும் பாக்கியாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ நீ கவலையே படலையா அக்கா என்கிறார் செல்வி. என்னை அவருக்கு எப்பயுமே பிடிக்காது. நான் என்ன செய்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். நான் சரியான அம்மாவாக இல்லை என்பதை அடிக்கடி சொல்லி என்னை குத்தி காட்டிக்கொண்டே இருப்பார்.

அப்போதெல்லாம் எனக்கு புரியவில்லை. ஏன் அமைதியாக இருந்தேன் என இப்போது வருத்தப்படுகிறேன். அப்பவே அவர் மண்டையில் கொட்டி நீங்க எனக்கு பாடம் சொல்லாதீங்க என சொல்லி இருக்கணும். என் சொந்த காலில் நிற்கும் போது தான் சுயமரியாதை என்றால் என்னனு எனக்கு தெரியுது.

இதையும் படிங்க: சாய் பல்லவி பர்த்டே!.. அந்த பட அப்டேட் வருமா?.. எதிர்பார்ப்புகளை எகிற விடும் ரசிகர்கள்!..

இனிமே அவர நான் பார்த்துக்கிறேன் என்கிறார் பாக்கியா. ஈஸ்வரி தூங்காமல் புரண்டு கொண்டிருக்க ராமமூர்த்தி ஏன் இன்னும் தூங்கலையா என்கிறார். சாப்பிட்டது ஏதோ செரிக்கல தண்ணி குடிச்சிட்டு வரேன் எனக்கூறி எழுந்து செல்கிறார். அப்போ வெளியில் ஹாலில் கோபி அமர்ந்திருக்கிறார்.

நீங்க தூங்கலையா அம்மா என கோபி கேட்க நீ சொன்ன விஷயத்தை எப்படி தூக்கம் வரும் என்கிறார். ராதிகா ஏண்டா புரிஞ்சுக்காம நடக்கிற எனக்கே கடுப்பா தான் இருக்கு என்கிறார் கோபி. நானும் நிறைய சொல்லி பாத்துட்டேன். இந்த குழந்தை வந்தால் என் பசங்க என்னை மதிக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டேன். ஆனா அவ ஏத்துக்கவே மாட்டிங்கிறாள்.

இதையும் படிங்க: ஜெயலலிதா எங்கிட்ட கடைசியா பேசுன வார்த்தை அதுதான்… நெஞ்சைத் தொட்டுட்டாரே பி.வாசு..!

கொஞ்ச நாளாவே நான் என்ன செஞ்சாலும் அது தப்பாவே முடியுது. சரியான தூக்கம் இல்ல. எனக்கு ஏதாச்சும் ஆகணும். அப்போதான் அவ நிம்மதியா இருப்பா என்கிறார். ஈஸ்வரி ஏன் அப்படி பேசுற நான் பேசுறேன் அவ கிட்ட எனக்கு கூறி கோபியை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்.

அடுத்த நாள் காலை கோபி உட்கார்ந்து இருக்க அங்கு வருகிறார் ராதிகா. எப்போ இந்த விஷயத்தை வீட்டில் சொல்லுவீங்க என்கிறார். உங்க அம்மா ஏதாவது என்ன பண்ணிட்டா எனக் கேட்க அவங்க உன்னை என்ன பண்ணிட போறாங்க. ஆமா நேத்து வந்து கலைக்கலாம் தானே சொன்னாங்க என்கிறார் ராதிகா.

அப்படியெல்லாம் எதுவும் நடந்திடாது. உன்னையும் குழந்தையும் பாதுகாப்பா நான் இருக்கேன். இப்ப என்ன வீட்ல இந்த விஷயத்தை சொல்லணும் தானே. இப்ப எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. வாக்கிங் போயிட்டு வந்து எல்லார்கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லிடுறேன் எனக் கூறி இருந்து செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story