காண்ட்ராக்ட் கிடைக்கிறது காசு வாங்குறது.. இந்த கோபி பல்ப் வேற… வேற கதையே இல்லையோ..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அரசு அலுவலகத்தில் சென்று காண்ட்ராக்ட்டிற்காக அப்ளே செய்கிறார் பாக்கியா. அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொடுத்ததும் முன் பணமாக 10 ஆயிரம் கட்ட சொல்ல எழில் அதை கட்டி விடுகிறார். காண்ட்ராக்ட் கிடைத்து விடும் என நினைக்க திடீரென டெபாசிட் 1 லட்சம் கேட்கின்றனர்.
இதை கேட்ட பாக்கியா அதிர்ச்சியாகி விடுகிறார். அடுத்து பழனிசாமியை பார்த்து இந்த விஷயம் கூறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் நான் வேணா இந்த காசை தரவா எனக் கேட்கிறார். ஆனால் பாக்கியா நானே பாத்துக்கிறேன் சார்.
இதையும் படிங்க: விஷ்ணு விஷாலை துரத்திய சூப்பர்ஸ்டார் சர்ச்சை!.. ஓவரா அடிக்காதீங்க என விளக்கம் கொடுத்த லால் சலாம் ஹீரோ!..
வேண்டும் என்றால் உங்களிடம் கேட்கிறேன் என்கிறார். வீட்டுக்கு வந்து அமிர்தா, ராமமூர்த்தியிடம் இந்த விஷயத்தினை கூறுகிறார். அப்போ சாப்பிட்டு கொண்டு இருக்கும் கோபி பெரிய பிசினஸ்மேன் என கலாய்த்து கொண்டு இருக்கிறார். ஈஸ்வரி இதெல்லாம் தேவையே இல்லாத வேலை என்கிறார்.
அவளுக்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்காதும்மா எழுதி வேணா வச்சிக்கோங்க என்கிறார். இதையடுத்து ராமமூர்த்தி சாப்பிடுறவனும், சாப்பாடு போடுறவனும் அமைதியா இருங்க எனக் கடுப்படிக்கிறார். அவரும் நான் ரெடி செஞ்சு தரவா எனக் கேட்க வேண்டாம் என மறுத்துவிடுகிறார்.
இதையடுத்து வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் பாக்கியாவிடம் எழில் என் சம்பள பணத்தினை தரேன் என்க வேண்டாம் என மறுத்து விடுகிறார். இதையடுத்து மசாலா அரைக்கும் மெஷினை வித்துவிடலாம் என முடிவுக்கு வருகிறார்.
இதையும் படிங்க: படுத்தே விட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்!.. பொங்கலுக்கும் இதே நிலைமை தானா?..
இதையடுத்து வீட்டுக்கு வரும் பாக்கியாவின் ஊழியர்கள் பொருட்கள் வெளியில் இருப்பதை பார்த்து அவ்வளவோ தானா எல்லாம் என்கின்றனர். சீக்கிரமா சரி ஆகும். ஒரு காண்ட்ராக்ட் பார்த்து இருக்கேன். அது கிடைச்சிட்டா உங்களுக்கு கொடுக்க வேண்டிய காசும், சம்பளமும் தருவேன் எனக் கூறுகிறார். இதை பார்த்து அங்கு வரும் ஈஸ்வரி அகலக்கால் வைக்காத பாக்கியா எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.