மாலினியின் தில்லாலங்கடியால் குழம்பிய பாக்கியா… அடுத்த கோபியாக மாறிய செழியன்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் இனியாவை பார்க்க வருகிறார் பாக்கியா. எனக்கு காய்ச்சல் அப்பக்கூட உனக்கு வேலை தானே முக்கியம் என்கிறார். இதையடுத்து கோபி அங்கு வர அவரிடம் ஆறுதல் தேடிக்கொள்கிறார் இனியா.
இதையடுத்து ஹாலில் ஜெனியும், பாக்கியாவும் அமர்ந்து குழந்தையை தூங்க வைத்து கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து செழியன் வர ஆண்ட்டி நீங்க போனை வாங்கி வச்சது ரொம்ப நல்லதா போச்சு என்கிறார். அதையடுத்து பாக்கியாவிடம் செழியன் போன் எங்கம்மா, மாலினி எதுவும் கால் செய்தாலா என்கிறார்.
இதையும் படிங்க: ரஜினிக்காக விஜய் அப்படி பேசலயாம்… பின்னாடி இருக்கும் சூட்சமம் என்னனு தெரியுமா?…
இதையடுத்து ஏன் பண்ணனுமா? என்கிட்ட தான் இருக்கு. ஆனா ஆஃப் செஞ்சி வச்சிருக்கேன் என்கிறார். இதையடுத்து பாக்கியாவிடம் செழியன் ஏன் மா இப்டி பண்ணீங்க வீட்டுக்கு வந்திட போறா என பதட்டப்படுகிறார். வந்தா என்ன ஃப்ரண்டுனு தானே சொன்ன என்கிறார்.
இதனால் பதட்டப்படும் செழியன் அங்கிருந்து ரூமுக்கு சென்று விடுகிறார். இதையடுத்து பாக்கியா செழியன் போனை ஆன் செய்து பார்க்க தொடர்ந்து மாலினியிடம் இருந்து நிறைய மெசேஜ் வந்து இருக்கிறது. அதை பார்த்து டென்சன் ஆனவர். தொடர்ச்சியாக மெசேஜ்களை கேட்கிறார்.
அதில் மாலினி பேசியவைகளை எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து செழியனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்ப பாக்கியாவுக்கு அதிர்ச்சி அதிகமாகி விடுகிறது. இந்த விஷயம் ஜெனிக்கு தெரிந்தால் என்ன ஆகும் எனப் புலம்புகிறார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனால என்ன ஆகப்போறாரோ!… புலம்பி தள்ளும் அயலான் பட இயக்குனர்…
இந்த பிரச்னையை சரி செய்ய நினைக்கும் பாக்கியா மாலினிக்கு செழியன் அனுப்புவது போல கோயிலுக்கு வரக்கூறி மெசேஜ் செய்கிறார். கோயிலில் வெயிட் செய்யும் பாக்கியாவை பார்த்து மாலினி அதிர்ச்சி ஆகி விடுகிறார். இதையடுத்து செழியன் மூலமாக நான் தான் மெசேஜ் செய்ததாக கூறுகிறார்.
நேரடியாக விஷயத்துக்கு வரும் பாக்கியா, செழியனிடம் கேட்டா நீ அவனை மிரட்டுவதாக கூறுகிறான். அது தப்பு. இதையடுத்து மாலினி செழியன் மீது தப்பு இருப்பது போல ப்ளேட்டை திருப்பி போடுகிறார். செழியன் அவனுக்கு திருமணம் ஆன விஷயம் குழந்தை பிறந்த பிறகே எனக்கு தெரியும் என்கிறார்.
செழியன் கல்யாணம் செய்து கொள்கிறேன் எனச் சொன்னதாகவும், லவ் செய்து ஏமாற்றியதாகவும் கூறுகிறார். இதையடுத்து பாக்கியா பொய் சொல்லாத என்கிறார். இதையடுத்து நாங்க இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறுகிறார்.
இதனால் பேச முடியாமல் அதிர்ச்சியாகி நிற்கிறார் பாக்கியா. நீ சொல்றது உண்மையானு என்னால் நம்ப முடியலை. அவன் உன்னை ஏமாத்துனா நான் கவனிச்சிக்கிறேன். உன்னை அவன் கஷ்டப்படுத்துனா நான் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார். ஆனா செழியனை மன்னிக்க மாட்டேன் என மாலினி கூறி செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.