சிவகார்த்திகேயனால என்ன ஆகப்போறாரோ!… புலம்பி தள்ளும் அயலான் பட இயக்குனர்…
Ayalaan Movie: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் அயலான். இத்திரைப்படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இரண்டாவது படம் இது. இவரின் முதல் படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் அடுத்த படம் வெளியாகவில்லை.
அயலான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஷரத் கல்கர், இஷா கோபிகர் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க வித்தியாசமான கதைகளத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க:தலைவர் 170, 171னு நடிக்க முடியுது.. அரசியலுக்கு மட்டும் வர முடியாதா?.. வாயடைத்துப் போன ரஜினி ரசிகர்!..
மேலும் இப்படத்தினை இயக்க பல வருடங்களாக திட்டமிட்டு பல தடங்களுக்கிடையே இப்படம் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் இப்படத்தினை இயக்குனர் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியுள்ளாராம். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் விரும்பும் ஒரு படமாக இருக்கும் என இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படம் தயாராகி இதன் டீஸர் வெளியானதும் இவரது தாய் இறந்துவிட்டாராம். தனது தாயை இழந்ததே தனது பெரிய இழப்பு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது தாய் தனது படத்தினை பார்த்துவிட்டு ஹாலிவுட் படம் போல் இருப்பதாக கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:தவறான நட்பால் உயிரிழந்த சுருளிராஜன்!.. எம்.ஜி.ஆரால் கூட காப்பாற்ற முடியாமல் போன சோகம்..
மேலும் இப்படத்தினை தான் நினைத்தபடி நல்லபடியாக கதையாக்க வேண்டும் என்பதே தனது முதல் நோக்கமாக இருந்ததாகவும் இவர் தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் இயக்கும்போது இவருக்கு வேறு எந்தவொரு படத்தினை இயக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை எனவும், தனது முழு நேரத்தையும் இந்த படத்தில்தான் செலவிட்டதாகவும் கூறினார்.
எனவே தனக்கு இப்படத்தின் வெற்றி மட்டுமே போதும் எனவும் அதுவே தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் இடையே ஏற்பட்ட சில சர்ச்சைகளால் இப்படத்தின் நிலைமை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் வாசிங்க:விஜய் சக்சஸ் மீட்டில் அஜித் பற்றிய கேள்வி!. கடுப்பான பிரபலம்!. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!..