செழியன் பிரச்னையில் பலியாடு ஆன பாக்கியா.. எழில் பிரச்னையும் இவர் தலையில் தான் விடியுமோ..!

0
483

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவை ரூமுக்கு உள்ளே அழைத்து வரும் கோபி எதுக்கு பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்ற என்கிறார். நான் நியாயத்தை தான் சொன்னேன். செழியன் தப்பு செஞ்சிட்டு உட்கார்ந்து இருக்கான். நீங்க பாக்கியாவை கேள்வி கேட்குறீங்க என்கிறார். 

ராதிகா செழியனை ஏன் கேள்வி கேட்க மாட்டிங்குறீங்க என்கிறார். பாக்கியா எங்கட்ட தெரிஞ்சும் சொல்லாம இருந்தது சரியா என்கிறார். சொல்லி இருந்தா ஜெனிக்கு தெரியாம பாத்துருப்பீங்க. அத தவிர என்ன செஞ்சிருப்பீங்க என ராதிகா கொதிக்க நீ ஏன் தெரியணும்னு நினைக்கிறே என்கிறார்.

இதையும் படிங்க:நீங்கலாம் பெரிய நடிகர்.. கொஞ்சம் மனசு வைங்க ப்ளீஸ்!.. நாகேஷிடம் கெஞ்சிய எம்.ஜி.ஆர்..

இதையடுத்து பாக்கியா உங்ககிட்ட சொல்ல வந்தாங்க. நான் தான் எதோ சொதப்பிட்டேன் என ராதிகா கோபப்படுகிறார். இதையடுத்து ராதிகா ஜெனிக்கு சப்போர்ட் செய்து பேசிக்கொண்டே இருக்கிறார். நீ இந்த விஷயத்துல தலையிடாத எனக்கூறி விட்டு கோபி வெளியில் செல்கிறார்.

இதையடுத்து ஈஸ்வரி ராதிகாவை திட்ட எழில் ராதிகாவுக்கு சப்போர்ட் செய்கிறார். செழியனை கேள்வி கேட்காமல் பாக்கியா மீது பழி போடுகிறார் ஈஸ்வரி. உங்களை வருத்தப்பட வைக்கக்கூடாது என நினைத்தேன். நானே சரி செய்யலாம் என நினைத்தேன்.

இதையடுத்து இந்த விஷயத்தினை கோபியிடம் பேச ட்ரை செய்தேன். அவர் காது கொடுத்து கேட்கவில்லை என்றார். ஈஸ்வரி உன்னால முடியாத விஷயத்தினை நீ ஏன் செய்ற எனக் கோபமாகிறார். ராமமூர்த்தியோ நீ ஒற்றை ஆளா கஷ்டப்பட்டதுக்கு என்கிட்ட சொல்லிருக்கலாமே என்கிறார்.

இதையும் படிங்க: ஏமாத்திட்டு போக சான்ஸே இல்ல!.. பிக்பாஸுக்கு பிரபலங்களை தேர்வு செய்ய இவ்வளவு டாஸ்க் இருக்கா?!..

இனிமேலாவது அடுத்தவங்க பேச்சை கேட்டு நடக்கப்பாரு என்கிறார். இதனால் பாக்கியா வருத்தமாக நிற்கிறார். இதையடுத்து ஜெனி வீட்டில் அவர் அம்மா, அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து செழியன் டெலிவரி அப்போவும் இல்லை. பாக்கியா திட்டினார். உன்கிட்ட மறைச்சிட்டாங்க எனக் கடுப்பாகி திட்டுகிறார்.

இதையடுத்து ஜெனி அழுதுக்கொண்டு இருக்கிறார். ரூமில் தனியாக அழுதுக்கொண்டு இருக்கும் செழியனை காண வருகிறார் கோபி. நீ ஏன் கல்யாணம் செஞ்சிக்கிறேனு வார்த்தை கொடுத்த என்க, நான் அப்படியெல்லாம் சொல்லலை. மாலினி சொன்னதுல பாதி பொய் என்கிறார்.

அப்போ மீது உண்மையா என கோபி செக் வைக்கிறார். நான் அவக்கூட பேசுனது கேஷுவலா தான் என்கிறார். வீட்டில் மனைவியை வச்சிக்கிட்டு இன்னொரு பொண்ணுக்கூட தங்குறது தப்பு தானே என்கிறார் கோபி. பின்னர் அவருக்கே உறுத்த செழியன் நீங்க மட்டும் ஒழுங்கா அப்பா எனத் தோணுதா என்கிறார்.

இதையும் படிங்க: முத்துவின் வாழ்க்கையில் தொடங்கிய பிரச்னை..! ரோகினிக்கு செக் வைத்த விஜயா..! சிக்கிட்டோமோ..!

கோபி என் நிலைமை வேற. உன் நிலமை வேற என்கிறார். எனக்கும் பாக்கியாவுக்கும் ஒன்னுமே செட்டாகலை. ஆனா உனக்கும் ஜெனிக்கும் அப்படி இல்லையே என்கிறார். இதையடுத்து ஜெனி கல்யாணத்துக்கு அப்புறம் என்கூட நேரம் செலவழிக்கலை என்கிறார்.

இதெல்லாம் ஒரு காரணமா என்கிறார் கோபி. ஜெனி திரும்ப வருவா. நம்பு செழியா என ஆறுதல் சொல்கிறார். இதையடுத்து சமையலறையில் இருக்கும் பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்கிறார் இனியா. அங்கு எழில் வர அவரும் எதுவும் சாப்பிடு என கவலையாக பேசுகிறார். இதையடுத்து என்ன பிரச்னைனு விசாரிக்கணும்னு யாருக்குமே தோணலை.

ஒரு பிரச்னை நடந்தா பாக்கியாவை திட்டணும் என்கிறார். நீ மாட்டிவிட்ருக்கணும். அப்போ இவங்க என்ன செய்வாங்க என்கிறார் எழில். இதையடுத்து செழியன் விஷயத்தில நடந்த மாதிரி எழில் விஷயத்திலையும் நடக்க கூடாது. எழிலிடம் சொல்லணும் என முடிவு எடுக்கிறார். எல்லாரும் புரிஞ்சிப்பாங்க என எழில் அட்வைஸ் செய்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news