செழியன் நிலை கண்டு உருகும் ஜெனி… பாக்கியா பக்கம் மொத்தமாக சாய்ந்த ராதிகா..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு ராதிகா கங்கிராஜுலேசன் சொல்கிறார். இதை பார்த்த செல்வி நீங்களே காண்ட்ராக்ட் பிடிங்கிட்டு இப்ப எதுக்கு இந்த கங்கிராஜுலேசன் என கேள்வி கேட்கிறார். எனக்கும் பாக்யாவுக்கு போட்டினு வந்தா நான் தான் ஜெயிக்கணும் நினைப்பேன்.
ஆனால் மற்ற இடங்கள்ல பாக்கியா தான் ஜெயிக்கணும் என்கிறார். இதையடுத்து ராதிகா கிளம்பிவிட அவரை புரிஞ்சிக்கவே முடியலை என்கிறார் எழில். பின்னர் ஜெனியை பார்க்க அவர் வீட்டுக்கு வருகிறார் செழியன். அவரின் நிலையை பார்த்த ஜெனி ஒன்னும் சொல்லாமல் உள்ளே வந்து விடுகிறார். உள்ளே வரும் செழியன், தன் தப்புக்கு மன்னிப்பு கேட்கிறார்.
இதையும் படிங்க: மனிஷா யாதவுக்கு டார்ச்சர் கொடுத்தேனா?.. வீடியோ ஆதாரத்தை போட்டு சீனு ராமசாமி கொடுத்த பதிலடி!..
அழுது குழந்தையை தடவி கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதையடுத்து ஜெனிக்கு ஆடியோ மெசேஜ் அனுப்புகிறார் பாக்கியா. அதில் தனக்கு பொருட்காட்சி ஆர்டர் கிடைத்து இருப்பதை கூறுகிறார். இதை பார்க்கும் ஜெனி அம்மா, செழியன் தப்பை விட்டாச்சு. இவங்க அத செஞ்சேன். இத செஞ்சேனு சொல்லிட்டு இருக்காங்க என்கிறார்.
அடுத்ததாக பாக்கியா தன்னுடன் வேலை செய்பவர்களை வீட்டிற்கு வரவைத்து பொருட்காட்சியில் என்னென்ன சமைக்கலாம் என்பது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து எழிலும், அமிர்தாவும் நிலா பாப்பாவுடன் ஜெனியை காண செல்கின்றனர். நிலா பாப்பா ஜெனிமா அழுதீங்களா ஏன் இப்படி இருக்க. எப்ப வீட்டுக்கு வருவ என்கிறார்.
இதையும் படிங்க: காதலருக்கே தெரியாமல் பாவனி பார்த்த வேலை!.. ரொம்ப கெட்ட பழக்கம் என எச்சரித்த அமீர்!..
இது ஜெனிக்கு ஆறுதலாக இருக்கிறது. இதை தொடர்ந்து எழில் எல்லாம் மாறும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். இதனையடுத்து, ராதிகா கோபியுடன் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் பாக்கியா பொருட்காட்சி காண்ட்ராக்ட்டுக்கு முதல் நாள் மட்டும் பொருளை கடனாக கொடுக்க முடியுமா எனக் கேட்க அவரும் சம்மதம் சொல்கிறார்.
ஆனால் கோபி கடன் வாங்கி குடும்பத்தை அசிங்கப்படுத்துறா என ராதிகாவிடம் கிசுகிசுக்கிறார். நான் கேட்கிறேன் இரு என அவர் முந்திக்கொண்டு போக ராதிகா அவரை மறைத்து கையோடு இழுத்து கொண்டு போய் விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைந்தது.