பாக்கியலட்சுமி: அம்ருதா, எழில் திருமணத்தை தெரிந்து கொண்ட கணேஷ்… மொத்த பழியையும் பாக்கியா மீது போட்ட ஈஸ்வரி..!
BakkiyaLakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் ஜெனியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். என்ன பாப்பா தூங்கிட்டே இருக்கா என்று கேட்க நைட் ரெண்டு மணிக்கு வந்து பாரு நல்லா பிரஷ்ஷா முழிச்சிட்டு இருக்கும் என கூறுகிறார்.
பிறகு அங்கு வரும் பாக்கியா ஜெனி அம்மாவிடம் நாங்க எங்க வீட்டுக்கு ஜெனியை கூட்டிட்டு போறோம் என்று சொன்னதும், அவர் அம்மா தயங்குகிறார். பிறகு ஜெனி செழியனை கேட்க அவரும் ஓகே சொல்லிவிட ஜெனியும் சரி என்கிறார். இதனால் இனி நான் சொல்ல என்ன இருக்கு என ஓகே எனக் கூறிவிடுகிறார்.
இதையும் படிங்க: படிப்பு வரலன்னா சாகணுமா?!.. மகளுக்காக மல்லுக்கட்டும் வத்திக்குச்சி வனிதா!….
இதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டுக்கு வந்து அங்கிருப்பவர்களிடம் ஜெனி நேரா இங்க தான் வரப்போற எனக் கூற எல்லாரும் ஒரே சந்தோஷமாகி விடுகின்றனர். பின்னர் காண்ட்ராக்ட் குறித்து கேட்கும் போது அதில் கோபி செஞ்ச விஷயத்தினை சொல்ல அங்கிருப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஆனால் ஈஸ்வரி எல்லா உன்னால தான். அவன் இருக்க வரை எல்லாமே அவன் தானே பாத்துக்கிட்டான். குடும்பத்துல பிரச்னை இல்லாமயா இருக்கும். நாங்க சொன்னத கேட்காம நீ தான் போய் டைவர்ஸ் கொடுத்துட்டு வந்த அதனால் தான் இப்டி பிரச்னையா வருது என பேச பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
இதே நேரத்தில் அம்ருதாவை தீவிரமாக தேடி வரும் கணேஷ், அம்ருதாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாக அங்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கூற அதிர்ச்சி ஆகிறார். இருந்தாலும் அப்படி இருக்க வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டு செல்கிறார்.
இதையும் படிங்க: லோகேஷ் இத செஞ்சது ரொம்ப பெருமையா இருக்கு! என்ன ஆண்டவரே நீங்களா இப்படி சொல்றது?
அம்ருதாவின் தோழியை கல்லூரியில் பார்த்த பெண் சந்திக்க வைக்கிறார். அவ நம்பர் எல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் அவளுக்கு எழில் என்பவருடன் கல்யாணம் ஆகிவிட்டது. அவங்க மாமியார் ஈஸ்வரி புட்ஸ் என்ற பிசினஸை செய்துவருவதாக கூறுகிறார். இதனால் கணேஷ் அதிர்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.