பாக்கியலட்சுமி: மாலினிக்கு குட் பாய் சொன்ன செழியன்... அமிர்தாவை கண்டுப்பிடித்த கணேஷ்..!

by Akhilan |
பாக்கியலட்சுமி: மாலினிக்கு குட் பாய் சொன்ன செழியன்... அமிர்தாவை கண்டுப்பிடித்த கணேஷ்..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினியை ஹோட்டலில் சந்தித்த செழியன். நமக்குள் இனி எதுவும் இல்லை. நான் இந்த ப்ராஜெக்ட்டையும் பார்க்க விருப்படலை. ஆபிஷில் சொல்லிடுறேன். ஜெனி என்னை ரொம்ப நம்புறா. அவ பிரசவத்துல துடிச்சா அப்போ நா அவக்கூட இல்லை.

இனி அவக்கூட மட்டும் இருக்கணும் நினைக்கிறேன். நீ என்னை ஆபிஷில் புகார் கொடுத்து வேலைய விட்டு தூக்குனாலும் பரவாயில்லை என்கிறார் செழியன். நான் இனி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என மாலினி எவ்வளவு சொல்லியும் இனி அவ்வளவு தான் எனச் சொன்ன செழியன் அங்கிருந்து குட்பாய் சொல்லி கிளம்பிவிடுகிறார்.

இதையும் படிங்க: கன்னத்தில் அறைந்த அசின்!.. அதிர்ந்துபோய் அப்படியே நின்ற விஜய்!.. அட அந்த படத்திலா?!..

இதனால் மாலினி கோபத்துடன் அங்கிருக்கிறார். இதையடுத்து பாக்கியாவிடம் வேலை பார்க்கும் பெண்கள் அவரை காண வருகிறார். பாண்டிச்சேரியில் சமைத்த காசை வீட்டில் கேட்பதாக கேட்டு நச்சரிக்கின்றனர். இரண்டு நாளில் காசை கொடுங்க எனக் கேட்க எப்படி உடனே என பாக்கியா இழுக்க எங்களுக்கு தெரியாது கொடுத்துடங்க என கிளம்பி விடுகின்றனர்.

அதையடுத்து கோபி தன் வீட்டில் அமர்ந்து மயூவிற்கு பாடம் சொல்லி கொடுக்கிறார். அப்போது கிரிடிட் கார்ட் ஆள்கள் வர அவர்களை வெளியில் அழைத்து சென்று பேசுகிறார். நான் எவ்வளவோ கணக்கு வச்சிருக்கேன் தெரியுமா? பணத்தை சீக்கிரம் கட்டி விடுகிறேன் என சமாளித்து அனுப்புகிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ரோகினி அம்மாவை லாக் செய்த மீனா… ஒரே பதிலால் மாட்டிவிட்ட க்ரிஷ்…

ஆனால் இதை பார்த்த ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகம் வருகிறது. அடுத்து பாக்கியாவின் ஏரியாவை நெருங்கிய கணேஷ் ஈஸ்வரி கேட்டரிங் வைத்திருக்கும் பாக்கியா வீட்டை தேடுகிறார். சரியாக அவர் நெருங்க அந்த நேரம் அம்ருதா நிலாவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்கிறார்.

அம்ருதாவை பார்த்த கணேஷ் பின்தொடர்ந்து பாக்கியா வீட்டிற்குள் வர அங்கு எழிலுடன் அம்ருதா இருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சிடைகிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story