பாக்கியலட்சுமி: பிரசவ வலியால் கதறி துடித்த ஜெனி… நான் வரமாட்டேன்… ராதிகாவுக்கு ஷாக் கொடுத்த கோபி..!

by Akhilan |
பாக்கியலட்சுமி: பிரசவ வலியால் கதறி துடித்த ஜெனி… நான் வரமாட்டேன்… ராதிகாவுக்கு ஷாக் கொடுத்த கோபி..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனிக்கு பிரசவ வலி வந்துவிட அவரை குடும்பத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். ஓவர் வலியில் ஜெனி அழுது துடிக்க செழியனும் வலியில் இருக்கும் ஜெனியை பார்த்து கண்கலங்கி துடிக்கிறார்.

பாக்கியா செழியனை அழைத்து ஜெனிக்கு அருகில் அமர வைத்து ஆறுதல் சொல்லுப்பா என பக்கத்தில் உட்கார வைக்கிறார். ஜெனி வலியால் அழுவதை பார்க்க செழியனும் கண் கலங்கி அழுது வடிகிறார். இதனால் காண்டான பாக்கியா நீ முதல வெளியே போ என அனுப்பி விடுகிறார்.

இதையும் வாசிங்க:வனிதாவை விட வாய் அதிகமா இருக்கும் போல!.. முதல் நாளிலேயே இத்தனை பேர் நாமினேட் பண்ணியிருக்காங்க!..

இதற்கிடையில் மாலினி அடிக்கடி செழியனுக்கு கால் செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் செழியன் தொடர்ச்சியாக கட் செய்கிறார். மறுபக்கம் இனியா, ராமமூர்த்தி வீட்டில் இருக்கின்றனர். இனியா ஹாஸ்பிடல் போலாமா எனக் கேட்கிறார். பிள்ளை பிறந்ததும் போலாம் என்கிறார். அந்த நேரத்தில் இனியாவிற்கு கோபி கால் செய்கிறார்.

ஜெனியை ஹாஸ்பிடலில் சேர்த்த விஷயம் சொன்ன உடனே கோபியும் கிளம்பி வந்து விடுகிறார். செழியன் அழுவதை பார்த்து கோபியும் அழுக ஈஸ்வரி கடுப்பாகி திட்டுகிறார். செழியன் எல்லாம் உங்களால தான். குழந்தை பெத்துக்கோ, குழந்தை பெத்துக்கோ என அவளை இந்த நிலைமைக்கு ஆக்கிட்டீங்க என ஈஸ்வரியை திட்டுகிறார்.

இதையடுத்து ஒருவழியாக ஜெனிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து விடுகிறது. இதில் குடும்பத்தினர் ரொம்பவே சந்தோஷப்படுகின்றனர். கோபி ஸ்வீட் வாங்கி அங்கிருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார். செழியன் செய்த சேட்டையை பாக்கியா கலாய்க்கிறார்.

இதையும் வாசிங்க:எதிர்நீச்சல் சீரியல்: ரசிகர்களை ஏமாற்றிய எதிர்நீச்சல்… ஆனா கதிருக்கு ஆப்பு வச்சது என்னமோ சந்தோஷம்தான்…

இந்த நேரத்தில் ராதிகா கோபிக்கு போன் செய்கிறார். ஜெனியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கிறோம். அவளுக்கு குழந்தை பிறந்துட்டு இரண்டு நாளைக்கு இந்த இடத்தினை விட்டு நகரவே மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் ராதிகா கோபமாகிறார்.

ராதிகாவின் அம்மா நீ போ குழந்தையை பார்த்துட்டு கையோட அவர கூப்பிட்டு வந்துடு. இல்லனா அவங்களே வச்சிப்பாங்க என அனுப்பி விடுகிறார். குழ்ந்தை பிறந்த மகிழ்ச்சியில் குடும்பம் இருக்க அவர்களுக்கு சாப்பாடு வாங்க கோபி வெளியில் வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Next Story