செழியனிடம் சைக்கோவாக மாறிய மாலினி… ஆனா கடுப்பாகுறது என்னவோ ரசிகர்கள் தான் ஜி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு கோயிலில் இருந்து கால் செய்து அங்காளம்மன் கோவில் கேட்டரிங் ஆர்டர் குறித்து பேசுகின்றனர். இதனை கேட்ட பாக்கியா சந்தோஷம் அடைந்து நிச்சயமாக இந்த ஆர்டரை எடுத்துக் கொள்வதாக கூறி விடுகிறார்.

அடுத்து செழியன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க ஜெனி என்னலாம் இப்படி கொஞ்ச மாட்டுற என கேட்க கொஞ்சிட்டா போச்சு என செழியன் ஜெனியை கொஞ்சிக்கொண்டு காதல் வசனம் பேசுகிறார். அப்போ மாலினி மூக்கு வேர்த்த போல கால் செய்து விடுகிறார்.

இதையும் வாசிங்க:இயக்குனர் விக்ரமன் மனைவிக்கு நேர்ந்த சோகம்!.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

ஆனால் செழியன் அதை எடுக்காமல் வைத்து விடுகிறார். தொடர்ந்து அவரிடம் இருந்து ஒரு ஆடியோ மெசேஜ் வருகிறது. அதில் நான் கேட்டப்ப பார்க்க வரேனு தான சொன்ன. இப்போ உடனே என்னை பார்க்க வா என மிரட்டும் தொனியில் கூறுகிறார்.

கிளம்பி கீழே செல்லும் செழியன் வழக்கம் போல பாக்கியாவிடம் சிக்கி கொள்கிறார். என்னமோ நடக்குது சரியில்லை. அந்த மாலினி உன் வாழ்க்கையில வரக்கூடாது. இப்போ போய் தூங்கு என கறாராக சொல்லி அனுப்பி விடுகிறார்.

தூங்கி எழுந்த செழியனுக்கு மாலினியிடம் இருந்து கால் வருகிறது. ஜெனிக்கு தவறுதலாக நம்ம இரண்டு பேரும் இருக்கும் வீடியோவை அனுப்பிட்டேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு செழியன் பதறி ஓடிப் போய் ரூமுக்கு செல்ல ஜெனி அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார்.

இதையும் வாசிங்க:சிக்கலில் தவித்த பி.வாசு குடும்பம்… தக்க சமயத்தில் உதவிய எம்ஜிஆர்… எப்படினு தெரியுமா?…

பின்னர் அது குழந்தையின் போட்டோ சோசியல் மீடியாவில் போட்டதால் ஜெனி கடுப்பாக இருக்கிறார். அடுத்து மாலினியிடம் இருந்து மெசேஜ் வர அது குழந்தைகளுக்கான ரைமிஸ் வீடியோ என்பதுடன் சற்று மூச்சு வாங்குகிறார். அதைத்தொடர்ந்து, கோபிக்கு ராதிகா போன் போட்டு எங்களை யாரோ மாதிரி நினைச்சிட்டு இருக்கீங்கள.

உங்களுக்கு அக்கறையே இல்லை என்று கோபப்படுகிறார். அப்போ ஈஸ்வரி வந்து போனை பிடுங்கி அவன் நீ சந்தோஷமாக இருக்க விட மாட்டியா என திட்டி ஃபோனை வைக்கிறார். கோபி புலம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it