Connect with us
p.vasu

Cinema History

சிக்கலில் தவித்த பி.வாசு குடும்பம்… தக்க சமயத்தில் உதவிய எம்ஜிஆர்… எப்படினு தெரியுமா?…

எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர். இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் என் தங்கை, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், ரிக்‌ஷாகாரன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.

இவர் நடிகரையும் தாண்டி சிறந்த மனிதரும் கூட. கஷ்டம் என யார் தேடி வந்தாலும் அவர்களுக்கு உதவும் குணமுடையவர். மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் பொதுவாக தன்னுடைய படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

இதையும் வாசிங்க:தேர இழுத்து தெருவுல விட்ட கதையா இருக்கு!… புது பஞ்சாயத்துக்கு ரெடியாகும் லலித்…

இவர் பெரும்பாலும் தேவர் ஃபிலிம்ஸ்கே படங்களை கொடுத்து வந்தார். இவரின் மேக்கப் மேனாக இருந்தவர் இயக்குனர் பி.வாசுவின் தந்தையான பீதாம்பரம். இவர்தான் எம்ஜிஆர்க்கு எப்போதும் மேக்கப் போடுபவர். இவரது குடும்பம் மிகப்பெரியதாம்.

வீட்டிலேயே கிட்டதட்ட 40 பேர் இருப்பார்களாம். இவர்கள் வீட்டு அடுப்பு என்றுமே அணைந்ததே இல்லையாம். வகை வகையான காய்கறிகள் என சமையலே மிகப்பிரம்மாண்டமாக இருக்குமாம். அப்படிபட்ட குடும்பத்தில் ஒரு சமயம் கடும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை அறிந்த எம்ஜிஆர் ‘எப்படி இந்த நிலைமை வந்தது?’ என அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

இதையும் வாசிங்க:அரவிந்த்சாமியை ஏமாற்றிய தனுஷ்… எல்லாம் அவரு படம் ஓடுனதுனால வந்த மெதப்பு போல…

அப்போது அவர்கள் தெலுங்கில் படம் தயாரித்து அதில் தோல்வி ஏற்பட்டதால் இந்த நிலைமை வந்துவிட்டது எனவும் மேலும் அவர்களது வீடு அடமானத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதை கேட்ட எம்ஜிஆர் மறுநாள் பீதாம்பரம் எம்ஜிஆருக்கு மேக்கப் போடும்போது ‘எதற்கு பீதாம்பரம் உங்கள் வீடு அடகில் உள்ளது என்பதை என்னிடம் கூறவில்லை?’ என கேட்டுள்ளார். மேலும் அவ்வாறு கேட்டுவிட்டு நாளை தினதந்தியை பாருங்கள் என கூறினாராம்.

மறுநாள் தினத்தந்தியை பார்த்தால் எம்.ஜி.ஆர் நடிக்கும் புதிய படத்திற்கு பீதாம்பரம்தான் தயாரிப்பாளர் என போடப்பட்டிருந்தது.  நாளிதழ் வெளியான அடுத்த நிமிடமே பீதாம்பரத்திற்கு வரிசையாக போன் வந்துள்ளது.  அப்படி எம்ஜிஆர் நடித்த படம்தான் நாளை நமதே. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின் வாசுவின் வீடும் அடமானத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தனது படத்தின் மூலம் எம்ஜிஆர் செய்த இந்த உதவியை என்றைக்கும் மறக்கமாட்டோம் என வாசுவே தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:விஜயின் ஹேர் ஸ்டைலுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா? ‘லியோ’ லுக்கை பற்றி ஹேர் ஸ்டைலிஸ்ட் பகிர்ந்த சீக்ரெட்

google news
Continue Reading

More in Cinema History

To Top