Connect with us
bala

Cinema History

சேதுவுக்கு முன்பே பாலா இயக்கவிருந்த திரைப்படம்!. ஐயோ பாவம் இப்படி ஆகிப்போச்சே!..

சேது திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்களில் ஒருவர் இவர். பாலுமகேந்திரா இயக்கிய வீடு உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அதன்பின்னர்தான் சேது படத்தை இயக்கினார்.

இந்த படத்தை உருவாக பாலா படாதபாடுபட்டார். பல நடிகர்களிடமும் கதை சொன்னார். யாரும் அவரை நம்பவில்லை. அதில் நடிகர் விக்னேஸும் ஒருவர். முரளி நடிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால், படத்திற்காக மொட்டை போட வேண்டும் என்பதால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை. இப்படி பல நடிகர்களின் பின்னால் சென்றார் பாலா.

இதையும் படிங்க: தேடிப்போய் சூனியம் வைத்துகொள்ளும் சியான் விக்ரம்!.. அட்டர் பிளாப் கொடுத்தும் அடங்கலயே!..

அதன்பின்னரே அவருக்கு விக்ரம் கிடைத்தார். ஒரு நல்ல கதைக்காவும், வெற்றிக்காகவும் விக்ரம் காத்திருந்த நேரம் அது. அதேநேரம், நல்ல தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஒருவழியாக கந்தசாமி என்பவரை தயாரிப்பாளர் ஆக்கினார் பாலா. சேது படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் விக்ரம். இந்த படம் உருவான பின்னர் வியாபாரம் ஆகவில்லை. சுமார் 6 மாதம் வினியோகஸ்தர்கள் பலருக்கும் இப்படத்தை போட்டு காட்டினார் பாலா.

பல மாதங்கள் கழித்துதான் இப்படம் வெளியானது. விக்ரமே சொந்த செலவில் தெருதெருவாக சென்று போஸ்டர் ஒட்டினார். படம் சிறப்பாக இருப்பதாக வாய் மூலம் பரவிய செய்திதான் இப்படத்திற்கு தியேட்டருக்கு ரசிகர்களை கொண்டு வந்தது. மெல்ல மெல்ல படம் பிக்-அப் ஆகி வெற்றி பெற்றது. அதன்பின் பாலா நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், நாச்சியார், தாரைதப்பட்ட உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.

இதையும் படிங்க: அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…

இப்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். உண்மையில், சேது படத்திற்கு முன்பே ஒரு தயாரிப்பாளரை பிடித்து அகிலன் என்கிற தலைப்பில் ஒரு படத்தை பாலா இயக்கிவிருந்தார். இந்த படத்திற்கும் பூஜையும் போடப்பட்டது. நடிகர் சிவக்குமார் கூட இந்த பூஜையில் கலந்துகொண்டார்.

ஆனால், தயாரிப்பாளருக்கும், பணம் கொடுக்கும் பைனான்சியருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அந்த படம் கைவிடப்பட்டது. மனம் உடைந்த பாலா சிவக்குமாரிடம் புலம்பிய கதையெல்லாம் நடந்தது. அதனால்தான், சேது படம் உருவான போது அப்படத்தில் விக்ரமின் அண்ணன் வேடத்தில் நடித்து கொடுத்தார் சிவக்குமார்.

இதையும் படிங்க: இதுக்காகவா அந்த படத்துல நடிக்கல? சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண விக்ரம்

google news
Continue Reading

More in Cinema History

To Top