பாலசந்தரும், பாக்கியராஜூம் ரிஜெக்ட் செய்த நடிகை... அதான் எப்படி நடிச்சாலும் ஹிட் கொடுக்க முடியலையா?
நடிகை அனுராதா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் ஒரிய மொழிகளில் நடித்துள்ளார். 34 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளாராம். ஆனால் அவர் எந்தப் படத்திலும் ஹிட் கொடுக்க முடியவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கியதும் தங்கம், கண்ணான கண்ணே, முத்தாரம் மற்றும் தெய்வமகள் என சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் தனது திரையுலகப் பயணங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பாலசந்தரின் அக்னி சாட்சி படத்தில் சொப்னா கேரக்டருக்கு என்னைக் கூப்பிட்டு டெஸ்ட் எல்லாம் பண்ணினாரு. ரொம்ப சின்னவளா இருக்கான்னு ரிஜெக்ட் பண்ணிட்டாரு.
அதே மாதிரி பாக்கியராஜின் சுவரில்லாத சித்திரங்கள் படத்திலும் என்னை அவர் ரொம்ப குட்டிப் பொண்ணா இருக்கான்னு ரிஜெக்ட் பண்ணிட்டாரு. அப்போ எனக்கு 16 வயசு இருக்கும். ரொம்ப பேபி மாதிரி முகம் இருக்குது. அதனால அந்தக் கேரக்டருக்கு செட்டாகாதுன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாரு என்றார்.
அது மட்டுமல்லாமல் அந்தக் காலத்தில சுமன் கூட 24 தெலுங்கு படங்கள் பண்ணினேன். அதுல 15 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அப்புறம் பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சிவகுமார், நிழல்கள் ரவி, மோகன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதே மாதிரி தமிழ்ல விஜயகாந்த் சாருடன் 27 படங்கள் வரை பண்ணியிருக்கேன்.
பிரபு சார் கூடவும் நிறைய பண்ணியிருக்கேன். எல்லாரும் நல்ல ப்ரண்ட்லியா இருந்தாங்க. அப்போ இன்டஸ்ட்ரி ரொம்ப வசதியா இருந்துச்சு. ஷாட் முடிஞ்சதும் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து நல்லது கெட்டதை பேச முடிஞ்சது. இப்போ அது இருக்குமான்னு தெரியல.
ஒருவேளை இவர் பாலசந்தரின் படத்தில் அறிமுகமாகி இருந்தால் தமிழ் சினிமாவில் அப்போதுள்ள 80ஸ் ஹீரோயின்களுக்கு ரொம்பவே டஃப் கொடுத்திருப்பார். அதே போல பாக்கியராஜ் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் முன்னணி கதாநாயகியாக மாறியிருக்கலாம் என்றே தெரிகிறது. ஏன்னா இளமையில் இவரது முகத்தோற்றம் வசீகரமானது.