Categories: latest news

நாம டைரக்டர் ஆகணும்!.. பாக்யராஜை முடிவெடுக்க வைத்த அந்த திரைப்படம்!….

தமிழ் சினிமா இயக்குனர்களாலும், ரசிகர்களாலும் திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்டவர் கே.பாக்யராஜ். தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர் இவர். பாரதிராஜா இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.. அந்த படங்களின் கதை உருவாக்கம், திரைக்கதை, வசனங்களில் பாக்யராஜுக்கு முக்கிய பங்குண்டு..

பாக்யராஜ் நடிகராக மாற்றியது பாரதிராஜாதான்.. ஒரு கட்டத்தில் தானே படங்களை இயக்கி தானே ஹீரோவாக நடிக்க துவங்கினார் பாக்யராஜ். அவரின் படங்களுக்கு பெண்களிடம் அமோகமான வரவேற்பு இருந்தது.. குறிப்பாக அந்த ஏழு நாட்கள், தாவணிக் கனவுகள், சின்ன வீடு, முந்தானை முடிச்சு போன்ற படங்கள் வசூலை அள்ளியது. அவர் இயக்கும் படங்களில் மட்மில்லாமல் பல இயக்குனர்கள் இயக்கிய படங்களின் கதை வாதங்களில் பங்கேற்று பல திருத்தங்களை பாக்யராஜ் கூறியிருக்கிறார்..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக கருதப்படும் ஆர்.சுந்தர்ராஜன் சமீபத்தில் நடித்த பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். ‘நானும் பாக்யராஜும் நண்பர்கள்.. ஊரில் ஒன்றாகத்தான் ஊரை சுற்றிக் கொண்டிருப்போம்.. எங்கள் இருவருக்குமே சினிமாவில் போய் சேரவேண்டும் என்கிற ஆசை இருந்தது. நிறைய கதைகளை பேசுவோம்.. 1974ம் வருடம் பாலச்சந்தர் இயக்கத்தில் அவள் ஒரு தொடர்கதை படம் வெளியானது.

அந்த படத்தை பார்த்துவிட்டு ‘நாம டைரக்டர் ஆகியே ஆகணும்’ என இருவரும் முடிவு செய்தோம். அதன்பின்னர்தான் இருவரும் சென்னை வந்து வாய்ப்புகள் தேடினோம்.. பாரதிராஜாவுக்கு ஒரு உதவி இயக்குனர் தேவைப்பட்டார். எனக்கு வந்த வாய்ப்பு அது. ஆனால், நான் பாக்யராஜை அனுப்பி வைத்தேன். அவர் பெரிய இயக்குனராக மாறிவிட்டார்’ என பேசியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

18 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago