Connect with us

Cinema History

எவனோ போட்டிக்கு வந்துட்டான்… பாரதிராஜா படம் பார்த்து ஷாக்கான பாலசந்தர்… என்ன படமோ!

தமிழ் சினிமாவில் தோற்ற சில படங்கள் ரசிகர்களிடம் பெரிய இடம் பிடித்து இருக்கும். அப்படி ஒரு படம் தான் பாரதிராஜாவின் காதல் ஓவியம். இந்த படத்தில் நடித்த சுனில் பல காலம் கழித்து தன்னுடைய சினிமா நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் இருந்து, 1991ம் ஆண்டு என்னுடைய கல்யாணத்துக்கு பாரதிராஜாவை அழைக்க நேரில் அவரது அலுவலகம் சென்றேன்.

அப்போது அவருக்கு பாராட்டு விழா நடப்பதால் ரஷ்யா தூதரகம் சென்று இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். நானும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். யாரும் என்னை தடுக்கவில்லை. ஜீன்ஸ் சட்டை மற்றும் பேண்ட் அணிந்திருந்தேன்.

இதையும் படிங்க: அனிருத் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!. ராக் ஸ்டாரை டீலில் விட்ட கலாநிதி மாறன்…

என்னை யாரும் தடுக்கவில்லை. அனைவருடனும் அமர்ந்தேன். அப்போது மேடையில் பாக்கியராஜ், பாரதிராஜாவுடன் பாலசந்தரும் அமர்ந்து இருந்தார்.

கொஞ்ச நேரத்தில் மைக்கை பிடித்து பேசினார். எனக்கு 16 வயதினிலே படத்தின் பிரிவியூ காட்சிக்கான பத்திரிக்கை வந்தது. முதலில் எனக்கு அதற்கு போக விருப்பமே இல்லை. தள்ளி வைத்து விட்டேன்

ஷோ நாள் அன்று சரி போய் தான் பார்ப்போமே என நினைத்து அந்த காட்சியில் போய் அமர்ந்தேன். முதலில் சிகப்பு கலரில் பாரதிராஜா பெயர் வந்தது.

இதையும் படிங்க: ஜெயிலர் இவ்வளவு ஹிட் ஆனதுக்கு 4 விஷயம்தான் காரணம்!.. புட்டு புட்டு வைக்கும் திரையுலகம்….

யாரு இது என்ற சந்தேகத்துடன் படத்தினை தொடர்ந்து பார்த்தேன் நேரம் போக எனக்கு ஒரு போட்டி வந்துவிட்டது. இனி சூடு பிடிக்கும் என நினைத்து கொண்டேன் என பேசினார் என்று சுனில் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது அமெரிக்காவில் பேங்கிங் துறையில் வெற்றிகரமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

google news
Continue Reading

More in Cinema History

To Top