அனிருத் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!. ராக் ஸ்டாரை டீலில் விட்ட கலாநிதி மாறன்…

0
1075
jailer

ரஜினியின் உறவினர் மற்றும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் அனிருத். சிறுவயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு இசையமைக்க துவங்கியவர். தனுஷுட கூட்டணி அமைத்து இவர் உருவாக்கிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகமெங்கும் பிரபலமானது. துவக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

அதன்பின் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கும் இசையமைக்க துவங்கிய அனிருத் இப்போது ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு முன்னணி இசையமைப்பாளராக மாறிவிட்டார். ரஜினிக்கு பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் இவ்வளவு ஹிட் ஆனதுக்கு 4 விஷயம்தான் காரணம்!.. புட்டு புட்டு வைக்கும் திரையுலகம்….

மேலும், கமலின் விக்ரம் மற்றும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் இசைதான். ஒரு பக்கம் விஜய்க்கு கத்தியில் துவங்கி பீஸ்ட், லியோ என பெரிய படங்கள் அனைத்திற்கும் அனிருத்தின் இசைதான். அவ்வளவு ஏன்?. தமிழ் பட இயக்குனர் அட்லீ பாலிவுட் சென்று ஷாருக்கானை வைத்து இயக்கியுள்ள ஜவான் படத்திற்கும் அனிருத் இசைதான்.

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் 700 கோடியை நெருங்கும் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அனிருத் இசை முக்கிய காரணமாக இருந்தது.

இதையும் படிங்க: க்யூட்னஸ் அள்ளுது!. ஜெயிலர் பாட்டுக்கு குழந்தைகளுடன் ரீல்ஸ் போட்ட நயன்!.. வைரல் வீடியோ!…

இந்த படத்தை பார்த்த பலரும் அனிருத் இசை மிகவும் சிறப்பாக இருந்ததாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக ரஜினிக்கு பில்டப் கொடுத்த அனிருத்தின் பின்னணி அசத்தலாக இருந்தது. மேலும், இவர் இசையமைத்த ‘காவாலா’ பாடல்தான் ஜெயிலர் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அதோடு, தலைவரு நிரந்தரம் தீம் பாடலும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினியும் இதை பலமுறை கூறியிருந்தார்.

ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்தவுடன் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பி.எம்.டபிள்யூ கார் கொடுத்தார். அதேபோல், இயக்குனர் நெல்சனுக்கும் விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்தார். ஆனால், அனிருத்துக்கு இதுவரை ஒன்றும் கொடுக்கவில்லை. ஒருவேளை படத்தின் வெற்றிவிழாவில் அனிருத்துக்கு எதாவது பரிசு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் பைங்க: திக்கு தெரியாம அலைஞ்சப்போ ரஜினி காட்டிய வழி! ‘காதல் ஓவியம்’ கண்ணன் கொடுத்த ஷாக்

google news