உன்ன எப்படியா நான் மிஸ் பண்ணேன்!.. பாலச்சந்தரே பதறிய அந்த பிரபலம் யார் தெரியுமா?...

Balachandar : நாடகங்களை இயக்கி வந்த பாலச்சந்தர் ஒரு கட்டத்தில் சினிமாவிலும் நுழைந்தார். தமிழ் சினிமாவில் புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்த ஒரே இயக்குனர் இவர்தான். எல்லோரும் ஹீரோவை மையப்படுத்தியே கதைகளை யோசித்தபோது பெண்களின் வாழ்க்கையை, சோகத்தை, குடும்பத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனையை, பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையை அலசி கதைகளை எழுதி இயக்கினார்.
அதனால்தான் அவர்கள், தப்பு தாளங்கள். அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, மரோ சரித்ரா, சிந்து பைரவி, தப்பு தாளங்கள், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும், கல்கி ஆகிய படங்களை அவரால் இயக்க முடிந்தது. தான் இயக்கிய படங்கள் மூலம் பல புதிய நடிகர், நடிகைகளை இவர் அறிமுகம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: சாரி நான் இமயமலைக்கு போகணும்!. ரஜினியை தடுத்து ஒரே நாளில் எடுத்த பாட்டு!.. அட செம ஹிட்டு!…
கமல்ஹாசனை ஒரு நடிகராக மெருகேற்றியவர் பாலச்சந்தர்தான். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தார். கமல், ரஜினி, சரிதா, பிரகாஷ்ராஜ், விவேக், ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஜெயசித்ரா, சுஜாதா என பலரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர் என்பதால் பாலச்சந்தரின் தயாரிப்பில் பல திரைப்படங்கள் ரஜினி நடித்திருக்கிறார். தில்லு முல்லு, வேலைக்காரன், ஸ்ரீராகவேந்திரா, நான் மகான் அல்ல, அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களை பாலச்சந்தர் தயாரித்தார். இதில், அண்ணாமலை படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா.
இந்த படத்தின் பாடல்களை கேட்ட பாலச்சந்தர் ‘நீ ஏன் என்ன வந்து பாக்கவே இல்லை. உன்ன எப்படியா நான் மிஸ் பண்ணேன். உன்னை நான் அறிமுகப்படுத்தி இருப்பேனே’ என சொன்னாராம். அதற்கு தேவா ‘ வருசக்கணக்குல உங்கள பாக்க அழைஞ்சேன். உள்ளேயே விடமாட்டார்கள்’ என சொன்னாராம். அதன்பின் பாலச்சந்தர் தான் இயக்கிய கல்கி படத்தில் தேவாவை இசையைமைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித்துக்கு போடுற பாட்டு மாதிரியே எனக்கு வேணும்! தேவாவிடம் வெட்கத்தையும் விட்டு கேட்ட ஏழடி ஹீரோ