Connect with us
deva

Cinema News

அஜித்துக்கு போடுற பாட்டு மாதிரியே எனக்கு வேணும்! தேவாவிடம் வெட்கத்தையும் விட்டு கேட்ட ஏழடி ஹீரோ

Deva Music: தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் தங்கள் இசை சாரலில் ரசிகர்களை மிதக்க வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற வகையில் வெவ்வேறு இசை நயங்களுடன் எண்ணற்ற இசைக்கலைஞர்கள் வந்து போயிருக்கின்றனர்.

50, 60களில் கர்நாடிக் இசையே தலைதூக்கி இருந்தது. அதன் பிறகு இசைஞானியின் வரவால் கொஞ்சும் குயில் போல அனைவரையும் தாலாட்டு இசையில் பயணிக்க வைத்தார் இளையராஜா. அவரை அடுத்து ரஹ்மான், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, இமான், ஹரீஸ் ஜெயராஜ், அனிருத் போன்ற இன்னும் பல கலைஞர்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’க்காக அந்த முயற்சியை எடுப்பாரா அஜித்?.. ரிஸ்க்கா இருந்தாலும் ரேஸ் மன்னன்ல!…

அந்த வகையில் இளையராஜா கோலோச்சு இருந்த சமயத்திலேயே அவருக்கு சமமாக மதிக்கப்பட்ட ஒரு இசைக் கலைஞர்தான் தேவா. எந்தவொரு இசைக் கலைஞருக்கும் இல்லாத ஒரு தனித்துவம் தேவாவிடம் இருந்தது.

அதுதான் கானா. தனது கானா பாடல்கள் மூலம் மக்களை ஆட வைத்தார். சலோமியா , சலாம் குலாமு, கவலைப்படாதே சகோதரா போன்ற பாடல்கள் எல்லாம் கானாவை மையப்படுத்தியே வந்தததனால் மிக எளிதில் மக்களை சென்றடைந்தது.

இதையும் படிங்க: படம் கொலைவெறியா இருக்குன்னு வராம போயிடாதீங்க!.. குடும்பங்களை வரவழைக்க லியோ டீம் போட்ட செம பிளான்!..

குறிப்பாக அஜித்தின் ஆரம்ப கால ஹிட் படங்களுக்கு எல்லாமே தேவாதான் இசையமைத்திருப்பார். இந்த நிலையில் தேவா ஒரு பேட்டியில் கூறும் போது  ‘அஜித்துக்கு எப்படி பாட்டு போடுறீங்களோ அதே மாதிரியான பாட்டுதான் எனக்கும் போட வேண்டும்’ என ஒரு நடிகர் கூறினாராம்.

அவர் வேறு யாருமில்லை. சத்யராஜ். அப்படி போடும் போது என்னை அஜித்னு நினைச்சே போடுங்க என்றும் கூறினாராம். அதுமட்டுமில்லாமல் மன்மத ராசா பாடலும் சத்யராஜுக்கு பிடிக்குமாம். அப்படி ஒரு பாடலை எனக்காக போடலாமே என்று தேவாவிடம் கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: உலக மனநல தினத்தன்று, உங்கள் மனநலனை மேம்படுத்த சத்குரு வழங்கும் 5 டிப்ஸ் …

மேலும் நான் ஆடமாட்டேன் என்றெல்லாம் கவலைப்படாதீங்க. கண்டிப்பாக ஆடுவேன் என்று சொன்னதில் பேரில் அமைந்த பாடல்தான் ‘உம்மா உம்மம்மா ’ பாடல். இது அப்படியே மன்மத ராசா டோனில் அமைந்த தேவாவின் பாடல்.

google news
Continue Reading

More in Cinema News

To Top