Actor Nagesh: தமிழ் சினிமாவில் காமெடிகளுக்கான பங்கு மிகவும் இன்றியமையாதது. அதன்படி அந்த காலத்து கலைவாணர் முதல் இந்த காலத்து விவேக், வடிவேலு வரை அனைவரின் காமெடிகளுமே மக்கள் மனதில் வேரூன்றி நிற்கிறது. அப்படிபட்ட காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நாகேஷ்.
என்னதான் மத்திய அரசு ஊழியராக இருந்தாலும் சினிமாவில் தான் ஜொலிக்க வேண்டும் எனும் ஆசையில் பல நாடகங்களில் நடித்து பின் வெள்ளித்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர். இவர் மானமுள்ள மருதாரம் திரைப்படத்தின் மூலம் தனி சினிமாவில் அறிமுகமானார். பின் அன்னை, வேட்டை காரன், நவராத்திரி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இதையும் வாசிங்க:கமல் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்த நடிகர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை!.. அட சோகமே!..
இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே பல நாடகங்களிலும் நடித்துள்ளார். சென்னை நாடக சபா எனும் நாடக கம்பெனியில் நாடக நடிகராக இருந்தார் நாகேஷ். அப்போது கே. பாலசந்தரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது பாலசந்தர் நாகேஷுக்காகவே ஒரு நாடகம் ஒன்றை இயக்கி தருவதாக கூறியிருந்தாராம்.
அப்போது நாகேஷும் தினமும் விடாமல் பாலசந்தரின் அலுவலகத்திற்கே சென்று எனக்கு கதை எழுதியாச்சா?.. என கேட்பாராம். நாகேஷுன் விடாமுயற்சியினால் பாலசந்தரும் அவருக்கென ஒரு கதையை எழுதினாராம். சார்லி சாப்ளின் போன்ற கதாபாத்திரம்தான் நாகேஷுக்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணினாராம். அப்போது அவர் சர்வர் சுந்தரம் எனும் நாடகத்தை அவசரமாக எழுதினாராம்..
இதையும் வாசிங்க:டி.எம்.எஸ் வேண்டாம்!.. இந்த பாட்டை அம்மு பாடட்டும்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பாடல் எது தெரியுமா?..
ஆனால் நாடகம் முழுவதும் நீ சுந்தரமாக மட்டும்தான் இருக்க வேண்டும். எங்கும் நாகேஷாக மக்களுக்கு தெரிய கூடாது என கூறிவிட்டாராம். நாகேஷும் அதற்கு ஒப்பு கொண்டு நடித்தாராம். அப்போது நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் பாலசந்தருக்கு நாகேஷை நினைத்து மிகவும் பதட்டமாக இருந்ததாம். அப்போது அதை நாகேஷிடமும் கூறினாராம். நாகேஷோ ‘பாலு உன்கிட்ட சொல்றதுக்கு என்ன எனக்கு முதல் சீனின் வசனங்களே மறந்தவிட்டது’ என கூறினாராம். அதை கேட்ட பாலசந்தருக்கு கூடுதல் பதட்டமாக இருக்க நாடகமும் ஆரம்பித்ததாம்.
நாடகம் ஆரம்பித்ததும் கையில் ஏராளமான் டபரா செட்டை எடுத்து கொண்டு நாகேஷ் வந்தாராம். உடனே அங்கிருந்த மக்கள் அவரை பார்த்து மகிழ்ச்சியில் சில நேரத்திற்கு நாகேஷ் நாகேஷ் என கத்தினராம். மக்களின் ஆதரவை பார்த்த பாலசந்தர் அப்போதுதான் நிம்மதியாய் இருந்தாராம்.
இதையும் வாசிங்க:அவள நீ கல்யாணம் பண்ணக்கூடாது!.. நடிகையை காதலித்த கார்த்திக்கு கட்டய போட்ட முத்துராமன்…
விவாகரத்துக்கு பிறகு…
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…
பிக்பாஸ் வீட்டில்…